ஜாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு ரூ1 லட்சம், பெண்களுக்கு 50% வேலை வாய்ப்பு- காங்கிரஸ் அதிரடி!
டெல்லி: ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்; மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவோம், நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்துவோம் என்பது உள்ளிட்ட 25 முக்கிய வாக்குறுதிகளுடனான தேர்தல் அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அனைத்து வாக்குகளும் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் ஆந்திரா, ஒடிஷா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இதுவரை 2 கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 39 வேட்பாளர்களும் இரண்டாம் கட்டமாக 43 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 2019 தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமேதியில் தோற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் அமோக வெற்றியைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 25 முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற உள்ளன. பிரதமர் மோடி அறிவித்து வரும் மோடியின் உத்தரவாதம் என்ற முழக்கத்துக்குப் பதிலடி தரும் வகையில் 25 உத்தரவாதங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மோடி உத்தரவாதம் என தனிநபர் ஒருவராக அறிவிக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ தமது தேர்தல் அறிக்கையில் ஒரு கட்சியின் சார்பாக உத்தரவாதங்களை அறிவிக்க உள்ளது என்றார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் முக்கிய வாக்குறுதிகள்:
- நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
- ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்
- மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்
-இடஒதுக்கீடு உச்சவரம்பு 50% என்பதை நீக்க அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளப்படும்
- "இந்தியா" கூட்டணி ஆட்சியில் 30 லட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications