திகாரில் பாதுகாப்பு இல்லை.. சிறை அதிகாரிகளால் உயிருக்கு ஆபத்து! சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு புகார்
டெல்லி: திகார் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரில் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் எப்போதும் கோடிக்கணக்கான சொத்துக்களை அடைய கனவு காண்பதை வாடிக்கையாக கொண்டிருந்தவர்.
எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் ஆசையில் 17 வயது முதலே யாரையாவது ஏமாற்றி பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டார். 2007ஆம் ஆண்டு தான் ஒரு உயர் அதிகாரி என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ75 கோடியை பெற்றுள்ளார்.

டிடிவி தினகரன்
அது போல் 2017ஆம் ஆண்டு அமமுக பொதுச் செயலாளர் தினகரனிடம் 50 கோடியை லஞ்சமாக பெற முயற்சித்தார். இந்த வழக்கில தினகரனின் புகாரின் பேரில் சுகேஷ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். ஜெயிலில் இருந்தாலும் மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி ரூ 200 கோடி பணத்தை மோசடி செய்துள்ளார்.

குற்றப்பத்திரிகை
இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுகேஷ். மனைவி லீனா மரிய பால் மற்றும் 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் சிறையில் சுகேஷிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு சொகுசு வசதிகளை 82 சிறை அதிகாரிகள் செய்து கொடுத்ததாக பொருளாதார குற்றப்பிரிவு புகார் அளித்துள்ளது.

சுகேஷின் உயிருக்கு ஆபத்து
இந்த நிலையில் சுகேஷின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் அசோக் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி திகார் சிறையில் காவலர்களால் தாக்கப்பட்டார். இதையடுத்து சுகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு பல முறை ஆபத்து
சிறையில் சுகேஷின் உயிருக்கு பல முறை ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து சுகேஷ் கடந்த மார்ச் 9ஆம் தேதி ஹரி நகர் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் சிறை துறை அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கடிதம் எழுதியும் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை.

சிறை துறையினர் மீது புகார்
சிறை துறையினருக்கு எதிராக சுகேஷ் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு சுகேஷை அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். கடந்த மே 13 ஆம் தேதி சுகேஷ் வலது கை வலியால் கடுமையாக அவதிப்பட்டார். அவரது ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ் ரே எடுத்தபோது அவரது காலில் ஒரு ஜவ்வு கிழிந்திருந்தது கண்டறியப்பட்டது என டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சுகேஷ் சார்பில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். இது குறித்து கடந்த 6 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் வழக்கு பட்டியலிடப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications