சம்மதத்துடன் உடலுறவு.. பிறகு கசந்த காதல்.. இதை வைத்து குற்ற வழக்கு தொடர முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
டெல்லி: ஆண்-பெண் இடையே பிளவு ஏற்பட்டாலும் சம்மதத்துடன் கூடிய உறவை வைத்து குற்ற வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. தன்னை ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய வழக்கில் இவ்வாறான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.. இந்த உத்தரவானது, பல்வேறு தரப்பின் கவனத்தை பெற்று வருவதுடன் விவாத்தையும் கிளப்பி வருகிறது.
கடந்த மாதம் ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது.. இளம்பெண் ஒருவர், இளைஞரை காதலித்தார்.. இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவை துண்டித்து கொண்டுவிட்டாராம் இளைஞர்.

எனவே,பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் படியேறினார்.. தன்னை ஏமாற்றி மோசம் செய்த காதலனுக்கு தண்டனை தரும்படி நீதிமன்றத்தில் கோரினார். தன்மீதான வழக்கு ரத்து செய்யும்படி இளைஞர் கோரினார்.
ஒழுக்க நடைமுறை
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தால் விசாரித்தபோது, "இன்றைய ஒழுக்க நடைமுறை வித்தியாசமாக உள்ளது.. "நீ ஒரு மேஜர்... உன்னை திருமணம் செய்து கொள்வேன்" என்று நம்பி ஏமாற்றப்பட்டிருக்க முடியாது. இவ்வளவு பலவீனமான விஷயங்களை கொண்டு பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையை தரமுடியுமா? ஆனால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டவள்..
பழமைவாத ஒழுக்க அமைப்பின் குறைபாடு காரணமாக, இதுபோன்ற புகார்களில் ஆண் மீது மட்டுமே பழி சுமத்தப்படுகிறது. ஆண் மட்டுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்று, நம்முடைய அமைப்பில் இடைவெளிகள் உள்ளன" என்று வேதனை தெரிவித்திருந்தார்கள். அத்துடன், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய இளைஞரின் மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக கூறி வழக்கையும் ஒத்திவைத்தனர். நீதிமன்றத்தில் இந்த உத்தரவானது பல தரப்பிலும் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.
திருமணமான பெண்
இந்நிலையில், இதுபோன்ற வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்துள்ளது.. மகாராஷ்டி மாநிலம் சதாராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, உத்தரவில் கூறியுள்ளதாவது:
"இந்த வழக்கில், தன்னுடைய கணவனை விவாகரத்து செய்யாமல், இந்த இளைஞருடன், திருமணமான பெண் உறவில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், முஸ்லிம் சட்டத்தின்படி, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, இந்த இளைஞருடனேயே அந்தப் பெண் சேர்ந்து வாழ்ந்துள்ளார்... அதிலும் 4 வயது குழந்தை இருக்கும்போது.
சட்டத்தை தவறாக பயன்படுத்துவது
கடந்த 2022 ஜூன் முதல் 2023 ஜூலை வரை இருவரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்துள்ளனர். 2023 ஜூலையில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக, அந்த இளைஞர் மீது பாலியல் பலாத்கார புகாரை கூறியுள்ளார். இப்படி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக பலாத்கார வழக்கு தொடர்வது என்பது, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகும். இதுபோல நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் பதிவாகின்றன. இவையெல்லாம் தனிநபரின் கண்ணியத்தை சீர்குலைப்பதாகும்.
ஒன்றாக சேர்ந்து வாழும்போது அல்லது காதலிக்கும்போது, நன்றாக தெரிந்துதான், பரஸ்பரம் உடலுறவு கொள்கிறார்கள்.. ஆனால், இருவருக்குள்ளும் காதல் கசந்த உடனேயே, அல்லது பிரிந்து சென்றதுமே பலாத்கார வழக்கு தொடர்கிறார்கள். இதை ஏற்க முடியாது... எனவே, அந்த இளைஞரை வழக்கில் இருந்து விடுவிக்கிறோம்" என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்கள் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications