ஹிட்லரின் கடைசி கால நிலைதான் பிரதமர் மோடிக்கு ஏற்படும்.. காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை
டெல்லி: ஹிட்லரின் பாதையை பின்பற்றினால் ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் பிரதமர் மோடிக்கு நேரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சுபோத்காந்த் சஹாய் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராகவும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் சுபோத்காந்த் சஹாய் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தியாகிகளால்தான் இந்த தேசம் உருவானது; இந்த நாட்டுக்காக எண்ணற்ற காங்கிரஸ் தியாகிகள் உயிரைக் கொடுத்துள்ளனர். ஆனால் நாங்கள் வரம்பு மீறியது இல்லை. சோனியா காந்தியை அவமதித்தால் எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனும் பொறுமையாக இருக்கமாட்டான்.
பிரதமர் மோடி ஹிட்லரின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். ஹிட்லரின் பாதையில் பிரதமர் மோடி சென்றால் நிச்சயமாக ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் நேரும். இவ்வாறு சுப்ப்த்காந்த் சஹாய் பேசினார். அவரது இந்த பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சுபோத்காந்த் சஹாயின் இப்பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பூனவல்லா கூறுகையில், பிரதமர் மோடி மீதான இத்தகைய விமர்சனம் கடும் கண்டனத்துக்குரியது; ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் இத்தகைய பேச்சுகளை ஊக்கப்படுத்துகின்றனர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஹூசைன், பிரதமர் மோடி நாயை போல அடிபட்டு சாவார் என பேசியது பெரும் பஞ்சாயத்தானது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications