இந்தியாவில் 44 நாட்களுக்குப் பிறகு 2 லட்சத்திற்கும் கீழே கொரோனா பாதிப்பு - குணமடைவோர் அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,86,364 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 44 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கடந்த 44 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,86,364 பேராக குறைந்துள்ளது. கொரோனா 2வது அலையால் இந்தியா லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கெரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை கடந்த 15வது நாளாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனாவால் மொத்தம் 2,75,55,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,59,459 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,93,410 பேராக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் 3,660 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் 3,18,895 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 23,43,152 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 20,57,20,660 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 33,90,39,861 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,70,508 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 90.34 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2,48,93,410 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 23ஆம் தேதி 30 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். செப்டம்பர் 5ஆம் தேதி 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். செப்டம்பர் 16ஆம் தேதி 50 லட்சம் பேரும் செப்டம்பர் 28ஆம் தேதி 60 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த நவம்பர் 20ஆம் தேதி கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டியது. 5 மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்துள்ளது. மே 4ஆம் தேதி 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,75,55,457 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் 2,48,93,410 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவால் 3,18,895 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 92,225 பேரும் கர்நாடகாவில் 27,405 பேரும் மரணமடைந்துள்ளனர். டெல்லியில் 23,812 பேரும் தமிழகத்தில் 22,289 பேரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 19,899 பேரும், மேற்கு வங்கத்தில் 14,975 பேரும் பஞ்சாப் மாநிலத்தில் 14,004 பேரும் மரணமடைந்துள்ளனர். சட்டிஸ்கர் மாநிலத்தில் 12,848 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
20.57 கோடி பேருக்கு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications