நாடு முழுவதும் ஒரே நாளில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று! 5,753 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!
டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது.
கொரோனா பாதிப்பை பொறுத்தவரை நேற்றை காட்டிலும் நாடு முழுவதும் இன்று 6.7% அளவுக்கு உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே இந்தியா முழுவதும் 5,753 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று
கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இருப்பினும் மக்களில் பெரும்பாலானோர் கொரோனா நம்மை என்ன செய்துவிடும் என்ற அலட்சியம் காட்டுவதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விறு விறு உயர்வு
இந்த பாதிப்பு நேற்றை காட்டிலும் இன்று 6.7% உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை 12,72,073 ஆக உயர்ந்திருக்கிறது. அதேவேளையில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 345 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து நலம்பெற்று கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் நாடு முழுவதும் 315 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

ஒமிக்ரான் பாதிப்பு
தினசரி கொரோனா பாசிட்டிவ் விகிதம் 14.78% எனத் தெரிவிக்கப்படுள்ளது. இந்தியா முழுவதும் 5,753 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முடிவுகள் வருவதற்குள் அறிகுறி உள்ளவர்கள் நலம்பெற்று விடுவதால் பெரும்பாலான இடங்களில் ஒமிக்ரான் சோதனை நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

73 லட்சம் பேர்
ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசிகளை செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 73 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications