"கொரோனா முடியவில்லை".. கூட்டம் முடிந்ததும் சுகாதார அமைச்சர் "ட்வீட்".. முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா "கொரோனா இன்னும் முடியவில்லை" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் விழிப்புடன் இருக்குமாறு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது, கொரோனா மீண்டும் வேகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 மீண்டும் பீதியில் ஆழ்த்திய சீனா

மீண்டும் பீதியில் ஆழ்த்திய சீனா

சீனாவில் கடந்த ஓராண்டு இல்லாத வகையில், கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அங்கு நாள்தோறும் கொரோனா பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாகவும், இடுகாடுகள் நிரம்பி வழிவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த விஷயங்கள் குறித்து சீனா எதுவும் கூறாத போதிலும், இந்த தகவல்களை அந்நாடு மறுக்கவும் இல்லை. மேலும், சீனாவில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அண்டை நாடு என்பதால் இந்தியாவிலும் கொரோனா பரவும் அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து, சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அத்துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.

"கொரோனா முடியவில்லை"

சுமார் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "இன்னும் கொரோனா முடியவில்லை. சம்பந்தப்பட்ட துறையினரை விழிப்புடனும், தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடும்படியும் அறிவுறுத்தியுள்ளேன். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள நாங்கள் (சுகாதாரத்துறை) தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 மரபணு சோதனை செய்ய முடிவு

மரபணு சோதனை செய்ய முடிவு

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், "சீனா, ஜப்பான், பிரேசில், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது. எனவே, இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை மரபணு சோதனை செய்ய ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. இதில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டால், அது பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.

 முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

மேலும், வைரஸ் பரவலை தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு மக்களை அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச, உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா சோதனை நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் விரைவில் வெளியாகும். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதலில், கொரோனாவை நினைத்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அரசு, சுகாதாரத் துறை, மருத்துவமனைகள் என அனைத்தும் தயார்நிலையில் உள்ளன" என ராஜேஷ் பூஷன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+