சத்தமில்லாமல் இந்தியா சாதனை.. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை
டெல்லி: இந்திய மருத்துவத் துறை சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் முறையாக, கொரோனாவுக்கு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைவிட கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை இன்று காலை 2,76,583 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 9,985 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நாட்டில் முதல் முறையாக ஆக்டிவாக உள்ள, அதாவது சிகிச்சையிலுள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையைவிட அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை
இதுவரை மொத்தம் 1,35,206 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 1.33 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, நாட்டில், கொரோனாவால், 7,745 நோயாளிகள் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 279 நோயாளிகள் இறந்துள்ளனர்.

உலகளவில் 5வது இடத்தில் இந்தியா
இதுவரை 50 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு பிறகு, கொரோனா கேஸ்களில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்தியா. ஒரே நாளில் இந்தியா 9,000க்கும் மேற்பட்ட கேஸ்களை தொடர்ந்து 8வது நாளாக பதிவு செய்துள்ளது.

குணமடையும் விகிதம்
இதுவரை 50 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு பிறகு, கொரோனா கேஸ்களில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்தியா. ஒரே நாளில் இந்தியா 9,000க்கும் மேற்பட்ட கேஸ்களை தொடர்ந்து 8வது நாளாக பதிவு செய்துள்ளது.

குணமடையும் விகிதம்
இருப்பினும், குணமடைவோர் விகிதம் அதிகமாக இருப்பது முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள, மகாராஷ்டிராவில் இதுவரை சமூக பரவல் நிலை இல்லை என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

சீனாவைவிட அதிகம்
டிசம்பர் மாதம் வுஹான் நகரில் கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால், சீனாவில் 84,000-க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும், 90,000 கேஸ்கள் உள்ளன. உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை உலகெங்கிலும் மோசமடைந்து வருவதாகக் கூறியுள்ளது. எனவே, மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications