டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா...உயிரிழப்பு...மத்திய ஆய்வுக்குழு நியமனம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கண்காணிப்பை மேற்கொள்ள மத்தியக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் உயிரிழப்பும் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் தற்போது 54,666 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசாவில் 27,219 பேரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 13,520 பேரும், ஜார்கண்டில் 11,577 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 2,25,632 பேரும், ஒடிசாவில் 1,00,934 பேரும், ஜார்கண்டில் 38,435 பேரும், சத்தீஸ்கரில் 30,092 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Corona surge in 4 states ;Special team has sent to monitor the situation in UP, Odisha

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3423 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 482 பேரும், ஜார்கண்ட்டில் 410 பேரும், சத்தீஸ்கரில் 269 பேரும் உயிரிழந்துள்ளனர். ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இருக்கும் இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்வது, பரிசோதனை அதிகரிப்பது, சிறப்பான சுகாதாரம் மேற்கொள்வது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அய்யோ எம்மா என்னை காப்பாத்துங்க.. தீவைத்துக் கொண்டு கதறிய பெண்.. காதில் வாங்காத மக்கள் அய்யோ எம்மா என்னை காப்பாத்துங்க.. தீவைத்துக் கொண்டு கதறிய பெண்.. காதில் வாங்காத மக்கள்

இந்தியாவில் இதுவரை 30.69 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20.84 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளனர். 65,288 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 792,541 பேருக்கும், ஆந்திராவில் 424,767 பேருக்கும், தமிழ்நாட்டில் 422,085 பேருக்கும், கர்நாடகாவில் 334,928 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 225,632 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

English summary
Corona surge in 4 states ;Special team has sent to monitor the situation in UP, Odisha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X