ஜனவரி 8ம் தேதி.. 2வது முறையாக நடக்கும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. நாடு முழுக்க பெரிய அளவில் ஏற்பாடு!
டெல்லி: ஜனவரி 13ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை நாடு முழுக்க பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை தேசிய அளவில் மிகப்பெரிய தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு, கொரோனா தடுப்பூசிகளுக்கு, இந்திய, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து, ஜனவரி 13ம் தேதி முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் ஜனவரி 2ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நாடு முழுக்க நடைபெற்றது. இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமையான, ஜனவரி 8ஆம் தேதி இதைவிட பெரிய அளவுக்கான ஒத்திகை நாடு முழுக்க நடைபெற உள்ளது.
சுமார் 3 லட்சம் தடுப்பூசி குழுவினர் இதில் பங்கேற்க உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஒத்திகை நிகழ்ச்சியின்போது, ஒவ்வொரு பகுதியிலும் 20 சுகாதார பணியாளர்கள் டம்மி தடுப்பூசிகளுடன் இருப்பார்கள். உண்மையான தடுப்பூசி போடப்படும் பணிகளின் போது எந்த மாதிரியான இடையூறுகள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த பயிற்சி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறார்கள் சுகாதார துறை வல்லுநர்கள்.
மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், காவல்துறையினர் போன்ற முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளையும், 2 முதல் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும் எனவே இவற்றை கொண்டு செல்வது மற்றும் பாதுகாத்து வைப்பது என்பது எளிதான விஷயம் என்று கூறப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications