வெறும் 7 சதவீத பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த தயக்கம்.. இந்தியாவில் குறையும் தொற்று.. புது ஆய்வு
டெல்லி: நம் நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுவதாக ஒரு புள்ளி விவர அறிக்கை கூறுகிறது.
உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.. அதற்கான முயற்சிகளில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு கொண்டிருக்கிறர்கள்.
எனவே, தற்சமயம் கை கொடுத்து உதவி கொண்டிருப்பது தடுப்பூசிகள் மட்டுமே என்பதால், உலக நாடுகள் அதில் முக்கிய கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

2 டோஸ்கள்
இதில் பல நாடுகள் 2 டோஸ்களையும் போட்டுவிட்டு, 3வது டோஸ்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், இந்தியாவிலும் 2வது டோஸ்களை செலுத்தும் பணி தீவிரமாகி கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை செலுத்தி கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர்.. எனவே, அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டன.. மேலும், தடுப்புசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு பரிசுகளை சில மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன.

புது ஆய்வு
இந்நிலையில் ஒரு புது ஆய்வு வெளியாகி உள்ளது.. இந்தியாவை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள்தொகை 94 கோடியாக இருக்கும் நிலையில், இதில் 68 சதவீதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது... கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை போடுவதற்கு 60 சதவீதம் பேர் தயக்கம் காட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது...

இந்தியா
ஆனால் முதல் பரவல் அலையை விட, 2வது வைரஸ் பரவல் அதிக ஆபத்தை நமக்கு ஏற்படுத்திவிடவும், தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கினர். இந்தியாவில் தற்போது தடுப்பூசி போடுவதற்கான ஆர்வம் எப்படி இருக்கிறது என்பதை "லோக்கல் சர்க்கிள்ஸ்" என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது... நாடு முழுவதும் 301 மாவட்டங்களில் 12,810 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உருமாறிய தொற்று
இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுகிறார்களாம்.. பாதுகாப்பு கவலை, தடுப்பூசிகளுக்கான அவசர டெஸ்ட், அவசர ஒப்புதல், பக்கவிளைவுகள் போன்ற காரணங்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும், தற்போதைய மற்றும் எதிர்கால உருமாறிய தொற்றுகளை தடுப்பதற்கு இப்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் செயல்திறன் உள்ளதாக இல்லை என்கிறார்களாம்.

செயல்திறன்
இந்த காரணத்தை சொல்லியே 27 சதவீதத்தினர் தடுப்பூசி போடுவதற்கு இதுவரை திட்டமிடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.. ஒருவேளை தற்போதுள்ள தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த கூடுதல் தகவல்கள், வீரியமிக்க வேறு தடுப்பூசிகள் கிடைத்தால் வேண்டுமானால் தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று ஆய்வு நடத்திய நிறுவன தலைவர் சச்சின் தபரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications