காஷ்மீர் முதல் சென்னை வரை.. மருத்துவமனைகளுக்கு ராஜ மரியாதை.. விமானப்படையின் கண்கவர் வீடியோக்கள்!
டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளை செய்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுக்க மருத்துவமனைகள் மீது விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Recommended Video
கொரோனாவிற்கு எதிராக நாடு முழுக்க மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும், அரசு ஊழியர்களும் கடுமையாக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நாடு முழுக்க விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி வருகிறது.
மேலும் காலை 10 மணி முதல் 11 மணி வரை விமானப்படை அணிவகுப்பு நடந்தது. ஹெலிகாப்டர்கள் நாடு முழுக்க முக்கிய நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவியது. போர் விமானங்கள் சுகோய் -30 எம்கேஐ, ஜாகுவார் மற்றும் மிக் 29 ஆகிய விமானங்கள் நாடு முழுக்க பறந்தது.
|
டெல்லி எங்கு?
டெல்லியில் ராஜ வீதியில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பறந்து மரியாதை செய்தது. டெல்லியில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, லோக்நாயக் மருத்துவமனை, ஆர்எம்எல் மருத்துவமனை, கங்கா ராம் மருத்துவமனை, பாபா சாகேப் அம்பேத்கார் மருத்துவமனை, மேக்சாகேத் மருத்துவமனை, ரோகிணி மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, ராணுவ மருத்துவமனை மீது மலர்கள் தூவப்பட்டது.
|
காஷ்மீர் எங்கே
லடாக்கில் உள்ள லே பகுதியில் இருக்கும் மாவட்ட மருத்துவமனையில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. டேராடூனில் எய்ம்ஸ் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, டூன் மருத்துவமனையில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. கோவாவில் பனாஜியில் உள்ள அரசு மருத்துவமனை மீது கப்பற்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
|
புவனேஷ்வர்
ஒடிசாவில் புவனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மலர்கள் தூவப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்தில் இருக்கும் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் மலர்கள் தூவப்பட்டது. வாரணாசியில் பிஎச்யு மருத்துவமனையில் மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஜெய்ப்பூரில் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
|
போபால் எப்படி
போபாலில் சாய்ராயு மருத்துவமனையிலும், எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஷில்லாங்கில் சிவில் மருத்துவமனையில் மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதேபோல் ராய்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சல்யூட் வைக்கப்பட்டது. மேலும் பெங்களூரில் விக்டோரியா மருத்துவமனையில் மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.

சென்னை நிலை
சென்னையில் 4 ஹெலிகாப்டர்கள் மலர் தூவியது. மேலும் விமானப்படை மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த தலா 2 ஹெலிகாப்டர்கள் இதில் ஈடுபட்டது. காலை 10. 30 மணிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மீதும், 10.35க்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனை மீதும் மலர் தூவப்பட்டது. 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனை மீது மலர்கள் தூவி டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications