Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் கருப்பு பூஞ்சையால் பலர் பாதிக்கப்பட காரணம் என்ன? ஆராய்ச்சியில் தெரிய வந்த 5 உண்மைகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது கருப்பு பூஞ்சையால் பலர் பாதிக்கப்பட்டனர். இதற்கு என்ன காரணம் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் சிலருக்கும் பிளாக் பங்கஸ் எனப்படும் மியூக்கர்மைக்கோசிஸ் பாதிப்பு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டது. இப்போதும் கூட இந்தியாவில் ஆங்காங்கே இந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த மே ஜூன் மாதங்களில் 30 பேர் வரை கருப்பு பூஞ்சை காரணமாக பாதிக்கப்பட்டனர்.

போபால், ஜபல்பூர் போன்ற மத்திய பிரதேச நகரங்களில் பலருக்கு அடுத்தடுத்து பிளாக் பங்கஸ் ஏற்பட்டது. மே மாத நிலவரப்படி இந்தியாவில் 14,872 பேர் வரை கருப்பு பூஞ்சை காரணமாக பாதிக்கப்பட்டனர்.

அதிகம்

அதிகம்

இப்போது இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை ஏற்பட்டது. ஒரு குழுவாக காணப்பட கூடிய அச்சு வடிவிலான பூஞ்சைகளின் தொகுப்புதான் மியூக்கர்மைக்கோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. கண்கள், மூளையை தாக்கும் இந்த பங்கஸ் தாக்குதல் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட தொடங்கி உள்ளது. அழுகிய பழங்கள், இறந்த விலங்குகளின் உடல்கள் என்று பல இடங்களில் இந்த கரும்பூஞ்சை காணப்படும்.

எப்படி?

எப்படி?

இது மிகவும் ஆபத்தானது. 50% இறப்பு விகிதம் இருப்பதால் கரும்பூஞ்சை மிகவும் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மூக்கு வழியாக அல்லது காது வழியாக உடலுக்குள் செல்லும் கரும்பூஞ்சை இதயம், மூளையை தாக்கும் ஆபத்து கொண்டது. இந்த நிலையில் இந்தியாவில் பலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட என்ன காரணம், இவர்கள் பாதிக்கப்பட்டது எப்படி என்று ஆய்வு அறிக்கை ஒன்று விவரமாக தெரிவித்துள்ளது.

 ஆபஹ்த்து

ஆபஹ்த்து

உலகில் பதிவான மொத்த கருப்பு பூஞ்சை கேஸ்களில் 71 சதவிகித கேஸ்கள் இந்தியாவில் பதிவானது ஆகும். இதற்கு 5 முக்கியமான காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் ஜிப்மர் மருத்துவமனையின் பிஜி ஆராய்ச்சியாளர்களும், ஜெர்மனியின் Leibniz Institute for Tropospheric Research அமைப்பை சேர்ந்தவர்களும், ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

காரணம் 1 : நீரழிவு நோய்,

காரணம் 1 : நீரழிவு நோய்,


அதன்படி இந்தியாவில் கருப்பு பூஞ்சை ஏற்பட மிக முக்கியமான காரணம் நீரழிவு நோய், சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்குதான் அதிகமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான நபர்கள் நீரழிவு நோய் கொண்டவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும் போதும் இந்த கரும்பூஞ்சை ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

காரணம் 2: ஸ்டிராய்டு

காரணம் 2: ஸ்டிராய்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் ஸ்டிராய்டு மருந்துகளை எடுத்தனர். ஆக்சிஜன் தேவைப்பட்டவர்கள், செயற்கை சுவாசம் பொருத்தி இருந்தவர்கள் வேகமாக குணமடைவதற்காக ஸ்டிராய்டு எடுத்தனர். அதிக அளவில் ஸ்டிராய்டு எடுத்தவர்களுக்கு இப்படி கருப்பு பூஞ்சை அதிகம் ஏற்பட்டுள்ளது. ஸ்டிராய்டு உடலில் இயல்பாக இருக்கும் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும். இப்படி எதிர்ப்பு சக்தி குறைவதாலும் ஸ்டிராய்டு பயன்பாட்டாலும் கருப்பு பூஞ்சை ஏற்படுத்துவதாக இதில் கூறப்பட்டுள்ளது.

காரணம் 3: சுத்தமின்மை

காரணம் 3: சுத்தமின்மை

அதேபோல் சுத்தமின்மை கூட கருப்பு பூஞ்சை ஏற்பட காரணமாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஆக்சிஜன் கான்சன்டேட்டர்களில் பொதுவாக தூய்மைப்படுத்தப்பட்ட டிஸ்டில்ட் நீர்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் சில இடங்களில் தூய்மை இல்லாத தொழிற்சாலை நீர் பயன்படுத்தப்பட்டது. சில இடங்களில் வீடுகளிலேயே உள்ள நீரை பயன்படுத்தி உள்ளனர். அதேபோல் ஆக்சிஜன் சிலிண்டர்களில் தூய்மை இல்லாத பைப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தூய்மை இல்லாத ஆக்சிஜனை சுவாசித்து அதனால் இன்பெக்சன் ஏற்பட்டு அது கருப்பு பூஞ்சை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் 4 : இரும்பு சத்து

காரணம் 4 : இரும்பு சத்து

அதேபோல் உடலில் அதிக அளவில் இரும்பு சத்து உயர்வதும் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரைகளை பயன்படுத்துவதால் உடலில் இருக்கும் ஆக்சிஜனில் எதிர்வினை ஏற்படுகிறது. இந்த எதிர்வினை திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மேலும் அதிக அளவில் திசுக்களில் இரும்பு சத்து சேர வழிவகுக்கிறது. இதுதான் கருப்பு பூஞ்சை ஏற்பட காரணமாகிறது. இந்தியாவில் கொரோனா நோயாளிகள் பலர் அதிக அளவில் இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொண்டது குறிப்பிடத்தக்கது.

காரணம் 5: போதிய காற்று இல்லாதது

காரணம் 5: போதிய காற்று இல்லாதது

கொரோனா சமயத்தில் பலர் வீடுகளில் சிகிச்சை மேற்கொண்டனர். தனி அறையில் தனிமைப்படுத்திக்கொண்டனர். இதனால் போதிய அளவிலான தூய்மையான காற்றை அவர்கள் சுவாசிக்கவில்லை. இதன் காரணமாக காற்றில் உள்ள கருப்பு பூஞ்சைகள் எளிதாக இவர்களை தாக்கி இருக்கும். இவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதை பயன்படுத்தி கருப்பு பூஞ்சை இவர்களை எளிதாக தாக்கி இருக்கும், என்று இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+