டெல்லியில் 97 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர்? செரோ சர்வேயில் அதிர்ச்சி தகவல்!
டெல்லியில் 6-வது செரோ சர்வே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது
டெல்லி: டெல்லியில் 6-வது செரோ சர்வே நடத்தப்பட்டது.. அதில், 97 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்..
சீனாவில் உருவான கொரோனாவைரஸ் உலக நாடுகளை மிரட்டி கொண்டிருக்கிறது.. இப்போதைக்கு நமக்குள்ள ஒரே சஆறுதல் தடுப்பூசி மட்டுமே. எனவே, அதனை செலுத்தி கொள்ள அந்தந்த நாடுகள் தற்காப்பு நடவடிக்கையை துரிதமாக எடுத்து வருகின்றனர்.
எனவே, ஓரளவு தொற்று குறைந்து வருகிறது.. இந்த நிலையில் கொரோன வைரஸ் தற்போது வேறு ரூபத்தில் உருமாறியுள்ளது..
அதற்கு டெல்டா பிளஸ் என்று பெயரிட்டுள்ளனர் நிபுணர்கள்... இது முன்பு இருந்த வைரஸை விட கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா பிளஸ்
டெல்டா பிளஸ் அல்லது AY.4.2 என்று அழைக்கப்படும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. AY.4.2 எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா என்பது குறித்து ஐசிஎம்ஆர், எம்சிடிவிஆய்வு செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த தாக்கம் பெங்களூருவில் 2 பேரிடம் தென்பட்டதாக முதலில் செய்திகள் வந்த நிலையில், அதுகுறித்தும் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை
இதனிடையே, டெல்லியில் 6-வது செரோ சர்வே நடத்தப்பட்டது.. அதில், 97 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.. 28 ஆயிரம் மாதிரிகளை கொண்டு இந்த செரோ சர்வே நடத்தப்பட்டது... ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கும் மேற்பட்டோரில் 98 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிப்பு
தலைநகர் டெல்லியை பொறுத்தவரை, தொற்று ஓரளவு குறைந்து வருகிறது.. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 40ஆக உயர்ந்துள்ளது.. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 45 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிப்பு
இதனால், டெல்லியில் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 14 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 345 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்... சமயம், கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது.. நேற்று முன்தினம் யாருமே தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை.. இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 91 என்ற அளவில் உள்ளது. குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications