பண நோட்டுகள், காசுகள் மூலமும் கொரோனா பரவும்.. கவனம்.. ஹு விடுத்த எச்சரிக்கை.. இப்படி ஒரு சிக்கலா!?
டெல்லி: பண நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவி வரும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தற்போது 80 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 3285 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 95481 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

எப்படி பரவும்
இந்த வைரஸ் எப்படி எல்லாம் பரவும் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. அதன்படி இந்த வைரஸ் முதற்கட்டமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நீர் குமிழிகள் மூலம் பரவும். அதாவது இருமல், தும்மலின் போது வெளியாகும் நீர் குமிழிகள் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும். அதேபோல் கை குலுக்குதல் மூலம் கூட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை நாள் இருக்கும்
இந்த வைரஸ் பொதுவாக பல நாட்கள் சாதாரண இடத்தில் கூட உயிர் வாழும். அதாவது கதவில் கை பிடிக்கும் பகுதி, பொது இடங்களில் நோயாளிகள் தொட்ட பகுதி என்று இந்த வைரஸ் எங்கு வேண்டுமானாலும் உயிர் வாழும். பொதுவாக சாதாரண வெப்பநிலையில் 10 நாட்கள் வரை இது வாழும். குளிரான வெப்பநிலையில் 14 நாட்கள் வரை இந்த வைரஸ் இருக்கும். சூடான வெப்பநிலையில் குறைவாகவே வாழும்.

கொஞ்சம் போதும்
இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொவருக்கு மிக எளிதாக பரவும் என்பது குறிப்பிடத்தக்து. மிக சிறிய அளவு வைரஸ் இருந்தால் போதும். எளிதாக அது இன்னொருவரை தாக்கிவிடும். மூட்டை பூச்சி போல இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது கணிக்க கூட முடியாது. மிக மிக சிறிய பொருட்கள் வழியாக கூட இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இதை தடுக்கமுடியவில்லை.

பணம் மூலம்
பண நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமாக அழுக்காக இருக்கும் ரூபாய் நோட்டுகள் வழியாக அதிக அளவில் வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாய் நோட்டுகளை மக்கள் வைரஸ் தாக்குதலோடு பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் அதன் மூலம் வைரஸ் பரவும்.

காசுகளை அதிகம்
முக்கியமாக காசுகளில் எளிதாக வைரஸ் குடியிருக்க வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் எத்தனை நாள் வாழும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால் ரூபாய் நோட்டுகள், காசுகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் பண பரிவர்த்தனை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவில் சமீப நாட்களாக ஆன்லைன் பணபரிவத்தனை வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications