இந்தியாவில் படுஉக்கிரமாக தாக்கும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 396 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுவரை மொத்தம் 396பேர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மார்ச் முதல் வாரத்தை ஒப்பிடுகையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் கொரோனாவால் 57 பேர் பாதிக்கப்பட்டனர்.

சனிக்கிழமையன்று இந்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 396 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் கேரளாவில் 12 பேரும் மகாராஷ்டிராவில் 11 பேரும் பஞ்சாபில் 10 பேரும் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டவர்கள். இன்று மகாராஷ்டிராவில் மேலும் 10 பேருக்கும் தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 40% அளவுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications