டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் இந்தியர்கள் உள்பட யாரும் இந்த நாடுகளில் இருந்து இந்தியா வர முடியாது: மத்தியஅரசு அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஐரோப்பிய நாடுகள், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உள்பட யாரும் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை இந்தியாவிற்கு வருவதற்கு மத்திய அரசு தற்காலிகமாக தடை செய்ய முடிவு செய்துள்ளது.

Recommended Video

    இந்தியாவில் வைரஸ் 10 மடங்கு அதிகரிக்க கூடும்.. நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கை

    சீனாவின் வுகானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இதுவரை 8000 பேர் இறந்துள்ளனர். சுமார் 197000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

    கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளில் வாழும் மக்கள் பலருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு பரவுவதை தடுக்க மத்திய அரசு அதிரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளது.

    மேற்கு வங்கம், ஹரியானாவில் புதிதாக தலா ஒருவருக்கு கொரோனா பரவியது... இந்தியாவில் 139 ஆக உயர்வு மேற்கு வங்கம், ஹரியானாவில் புதிதாக தலா ஒருவருக்கு கொரோனா பரவியது... இந்தியாவில் 139 ஆக உயர்வு

    இங்கிலாந்து துருக்கி

    இங்கிலாந்து துருக்கி

    இந்தியா விமான போக்குவரத்து துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம், துருக்கி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணிப்பது இன்று (மார்ச் 18) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், எந்தவொரு விமான நிறுவனமும் மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிகளை ஏற்றாது. இந்த இரண்டு அறிவுறுத்தல்களும் தற்காலிக நடவடிக்கைகள் மற்றும் அவை மார்ச் 31, 2020 வரை நடைமுறையில் இருக்கும், பின்னர் அவை மதிப்பாய்வு செய்யப்படும" என்று தெரிவித்துள்ளது.

    சுவிட்சர்லாந்து

    சுவிட்சர்லாந்து

    ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பா முழுவதும் 27 நாடுகளைக் கொண்டுள்ளது, ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் சுவிட்சர்லாந்து, நார்வே, லிச்சென்ஸ்டீன் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த நாடுகளில் உள்ள இந்தியர்கள் உள்பட யாரும் இந்த மாத இறுதி வரை இந்தியாவுக்குள் வர முடியாது.

    இந்தியர்களுக்கும் தடை

    இந்தியர்களுக்கும் தடை

    கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு இந்திய குடிமக்கள் (OCI) அட்டைதாரர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான சமீபத்திய தடையைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இனி இந்தியர்களும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. இந்த மாத இறுதி வரை இந்தியாவுக்கான விமானங்களை ரத்து செய்யப்ட்டுள்ளதால் வர முடியாது.

    கட்டாய தனிமை

    கட்டாய தனிமை

    சீனா, கொரியா, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய ஏழு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கட்டாயமாக தனிமைப்படுத்துவதாக இந்தியா கடந்த வாரம் தாமதமாக அறிவித்தது. அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து அவற்றை மூன்று பிரிவுகளின் கீழ் வைக்கவும் முடிவு செய்திருந்தது. இந்த கூடுதலாக, 11 நாடுகளில் இருந்து வரும் இந்திய நாட்டினரை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு செல்ல இந்தியா உத்தரவிட்டுள்ளது.

    English summary
    India Government decided to prohibit the travel of Indian passport holders from EU, Turkey and UK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X