பிற மாநில தொழிலாளர்களை பேருந்தில் அனுப்புவதா.. மத்திய அரசின் முடிவிற்கு 7 மாநிலங்கள் எதிர்ப்பு!
டெல்லி: பிற மாநிலங்களில் வேலை பார்க்கும் வெளி மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு 7 மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, நோயை கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரம் முன் ஊரடங்கு குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடி, ஹாட் ஸ்பாட் பகுதிகளில் எப்போதும் போல ஊரடங்கு மே 3ம் தேதி தொடரும். ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது சில மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று பிற மாநிலங்களில் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் இவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது. இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறி இருந்தது.
இந்த நிலையில் பல்வேறு மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் 7 மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா,தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளரிடம் மாநில தலைமை செயலாளர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மாநிலம் கேரளாதான். கேரள அரசு இது தொடர்பாக தெரிவிக்கும் போது, வெளிமாநில தொழிலாளர்களை பேருந்தில் அனுப்புவது கடினமான காரியம். வடஇந்தியாவில் இருக்கும் நபர்களை பேருந்தில் அனுப்புவது இயலாத காரியம். அவ்வளவு தூரம் பேருந்தில் செல்வது என்பது கடினம், மத்திய அரசு உடனே இதை பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
அதேபோல் தமிழக அரசும் தனது எதிர்ப்பில், வெளிமாநில தொழிலாளர்களை இப்படி பேருந்தில் அனுப்புவது சரியாக இருக்காது. இவர்களுக்காக சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் இவர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து பயணம் செய்ய முடியும்.இடையில் எங்கும் நிறுத்தாத வகையில் இந்த ரயில்களை இயக்க வேண்டும். சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது .
இந்த 7 மாநில அரசுகளும் வெளிமாநில தொழிலாளர்களை பேருந்துக்கு பதில் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது. மத்திய அரசு விரைவில் இதில் முடிவெடுக்கும் என்று அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications