உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12-வது இடம்- 75 ஆயிரத்தை நெருங்குகிறது
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 22,802 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.
அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யாவில் 10,899 பேருக்கும் பிரேசிலில் 8,459 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருநாள் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் 3,524 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,524 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இந்தியாவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் 3,403 ; பெரு நாட்டில் 3,237 பேருக்கு கொரோனா நேற்று உறுதியானது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,08,073 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஸ்பெயின் 2,69,520 ; ரஷ்யா 232,243; இங்கிலாந்து 226,463 ; இத்தாலியில் 221,216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினுக்கு அடுத்து ரஷ்யா
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா, ஸ்பெயினுக்கு அடுத்து 3-வது இடத்தில் ரஷ்யா இருக்கிறது. கொரொனா பாதிப்பில் இந்தியா 12-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்துள்ளது.

12-வது இடத்தில் இந்தியா
இந்தியாவுக்கு முன்னதாக 11-வது இடத்தில் உள்ள சீனாவில் கொரோனாவின் பாதிப்பு 82,919 ஆக உள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக 13-வது இடத்தில் இருக்கும் பெருவில் கொரோனாவின் பாதிப்பு 72,059 ஆகவும் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 85 ஆயிரத்தை நெருங்குகிறது.

அமெரிக்கா மரணங்கள்
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,573 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,368 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 32,692 ஆக அதிகரித்திருக்கிறது. இத்தாலியில் கொரோனா மரணங்கள் 30,911 ஆக உயர்ந்திருக்கிறது. பிரான்ஸில் 26,991 பேரும் ஸ்பெயினில் 26,920 பேரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?











Click it and Unblock the Notifications