இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166; 5734 பேருக்கு பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 5,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 1,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இம்மாநிலத்தில் அரசு கணக்கின்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் 669 பேருக்கு கொரோனா இருக்கிறது; இங்கு மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கொரோனாவுக்கு 16 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆனால் இம்மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 179 பேருக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனாவுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர்.
தெலுங்கானாவில் 427 பேரும் உ.பி.யில் 361 பேரும் ராஜஸ்தானில் 381 பேரும் கேரளாவில் 345 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆந்திராவில் 348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications