இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 471; பலி- 652 : மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,471 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 652 ஆகவும் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனாவின் தாக்கம் தொடர்பாக https://www.mohfw.gov.in/ இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் தொகுப்பு:
மகாராஷ்டிராவில் கொரோனாவால் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் 5221 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குஜராத், டெல்லி நிலவரம்
நாட்டில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளது குஜராத் மாநிலம். இங்கு கொரோனாவுக்கு 95 பேர் பலியாகி உள்ளனர். அத்துட்ன் 2272 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்ற 144 பேர் வீடு திரும்பியுள்ளனர். 3-வது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2156. உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.

3-வது இடத்தில் ராஜஸ்தான்
குஜராத், டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தானில் 1801பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 25 பேர் இம்மாநிலத்தில் மரணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 1626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 18 பேர் மாண்டும் போயுள்ளனர். 5-வது இடத்தில் மத்திய பிரதேசம், 6-வது இடத்தில் உத்தரப்பிரதேசமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

வட இந்தியா
மத்திய பிரதேசத்தில் 1592 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 1412 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தி 80 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 21 பேரும் கொரோனாவால் மரணித்திருக்கின்றனர். தெலுங்கானாவில் 945 பேரும் ஆந்திராவில் 813 பேரும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பு
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20471. கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 652. ஆனால் https://www.covid19india.org/ புள்ளி விவரப்படி இந்தியாவில் 21,370 பேர் பாதிக்கப்பட்டும் 681 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மத்திய அரசின் பக்கத்தில் பல மாநில நிலவரங்கள் அப்டேட் செய்யும் போது எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications