இந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு- 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 97,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,22,236.

உயிரிழப்பு 10 லட்சம்
உலகம் முழுவதுமான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடுகிறது. மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,44,623. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,17,76,101.

இந்தியாவில் அதி உச்சம்
உலக நாடுகளில் அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 38,002; 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,894. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,15,893 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர்
இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் 1,132 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 83,198 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் மொத்தம் 82,922 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40,25,080

மகாராஷ்டிராவில் அதிகம்
இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராதான் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 23,365 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,21,221. இது உலக நாடுகளில் ரஷ்யாவின் பாதிப்பை விட மிக அதிகமாகும்.

2-வது இடத்தில் கர்நாடகா
ஒருநாள் பாதிப்பில் கர்நாடகா 2-வதாக உள்ளது. கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாநிலத்தில் மொத்தம் 4,84,990 பேருக்கு கொரோனா பாதிப்பு. இதற்கு அடுத்ததாக ஆந்திராவில் 8,835 பேர், உத்தரப்பிரதேசத்தில் 6,229 பேர், தமிழகத்தில் 5,652 பேருக்கு 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications