கொரோனா இன்னும் முடியவில்லை.. கவனம்! இந்தியாவில் கழிவு நீரை ஆராயும் வல்லுனர்கள் எச்சரிக்கை.. பின்னணி!
டெல்லி: கொரோனா பரவல் இன்னும் முடிவிற்கு வரவில்லை, இந்த பெருந்தொற்று இன்னும் முடிவிற்கு வரவில்லை என்பதை சீனாவில் பரவும் கொரோனா கேஸ்கள் உணர்த்துவதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
சீனாவில் நேற்று முதல்நாள் மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 24.8 கோடி பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 18 சதவிகிதம் பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவிலும் 6 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா ஏற்பட்டுள்ளது. அதில் 4 பேர் நவம்பர் மாதத்திற்கு முன்பே குணமடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 196 பேர் புதிதாக் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் 3,428 ஆக உள்ளது.

கொரோனா
இந்த நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த Centre for Cellular & Molecular Biology (CCMB) நிறுவனத்தின் தலைமை மருத்துவர் ராகேஷ் மிஸ்ரா நியூஸ்18 ஆங்கில சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் இப்போதைக்கு கொரோனா எமர்ஜென்சி இல்லை. இந்த நேரத்தில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஆனால் அதற்காக நாம் கவனமின்றி இருந்துவிட கூடாது. நமது பாதுகாப்பை கைவிட்டுவிட கூடாது.

சீனா
சீனா போன்ற மற்ற நாடுகளில் தற்போது என்ன நடக்கிறதோ அது ஏற்கனவே இந்தியாவில் நடந்துவிட்டது. நாம் பல கோடி பேருக்கு வேக்சின் போட்டுவிட்டோம். அதேபோல் பூஸ்டர் டோஸ்களையும் பலருக்கும் போட்டுள்ளோம். நமக்கு தற்போது கலப்பு எதிர்ப்பு சக்தி உள்ளது. அதனால் நாம் பயப்பட கூடாது. ஆனால் புதிதாக உருவாகும் கொரோனா வேரியண்ட்களை நாம் கவனமாக கண்காணிக்க வேண்டும். புதிதாக கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். இதனால் வைரஸ் புதிய வேரியண்ட்களாக உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன என்று எச்சரித்துள்ளார்.

என்ன காரணம்
பொதுவாக கொரோனா பரவலை கண்டுபிடிக்க கழிவு நீர் ஆராய்ச்சி மிக முக்கியமானது. மக்கள் இடையே கொரோனா எந்த அளவிற்கு பரவி இருக்கிறது என்பதை கழிவு நீர் ஆராய்ச்சி மூலம் மேற்கொள்ள முடியும். கழிவு நீரில் இருக்கும் கொரோனா வைரஸ்களின் அளவை வைத்து ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் எவ்வளவு சதவிகிதம் கொரோனா பரவி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட கழிவு நீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு குடிநீரில் கூட கொரோனா கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கழிவு நீர்
அந்த வகையில் Tata Institute for Genetics and Society (TIGS) என்று அமைப்பு பெங்களூர் போன்ற நகரங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 28 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் இவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளனர். அதில் கழிவு நீரில் கொரோனா அளவு 60 சதவிகிதத்தில் 32 சதவிகிதமாக குறைந்துவிட்டதாக குறிப்பிட்டு உள்ளனர். இதன் அர்த்தம் வைரஸ் பாதிப்பு, பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் திடீரென புதிய அலை ஏற்பட்டால். அல்லது கேஸ்கள் உயர்ந்தால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். நாம் முன் கூட்டியே கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இந்த சோதனைகள் உதவியாக இருக்கும்.

நோயாளிகள்
பாரம்பரியமாக நோயாளிகளை சோதனை செய்து. அவர்களின் ஜீன்களை சோதனை செய்து. அதன்பின் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா என்பதைவிட இந்த முறை மூலம் இன்னும் வேகமாக கொரோனா பரவலை கண்டுபிடிக்க முடியும். தற்போது உள்ள டேட்டாக்களின்படி இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. ஆனால் இதற்காக நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. கொரோனா முற்றிலுமாக உலகம் முழுக்க குறைந்து, காணாமல் போகும் வரை, நாம் நமது பாதுகாப்பு கவசங்களை அகற்றாமல் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே சீனாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள் நமக்கு உணர்ந்துகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications