டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பீதி இவுகளையும் சும்மாவிடவில்லை...பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த ஐ.எஸ்.ஐ.எஸ். உத்தரவு!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால் எந்த ஒரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

உலகில் அதிகவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் குறைந்திருக்கிறது. ஆனால் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொத்து கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.

Coronavirus: ISIS suspends all terror activity

ஒட்டுமொத்தமாக உலக நாடுகளின் இயல்புவாழ்க்கையில் பெரும் முடக்கத்தை உருவாக்கி இருக்கிறது கொரோனா தாக்குதல். பல்வேறு நாடுகளில் பரிதவித்து வருவோரை ஒவ்வொரு நாடும் பாதுகாப்பாக மீட்டு தங்களது நாடுகளுக்கு அழைத்துச் சென்று வருகின்றன.

இந்த கொரோனா பீதியானது உலகின் அதிபயங்கரமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. இது தொடர்பாக அந்த இயக்கத்தில் அல் நாபா சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடவுள் மீதான உங்களது நம்பிக்கை தொடரட்டும். முக கவசங்கள் அணிந்து சுய பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.

Recommended Video

    மருந்து யாருக்கு சொந்தம்... அமெரிக்கா- ஜெர்மனி இடையே மோதல்?

    கொரோனா தொற்றுநோய் தாக்குதல் உள்ள நாடுகளுக்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயங்கரவாத ஜிஹாத் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். அடுத்த அறிவிப்பு வரை எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தவும் வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    ISIS has been sending out messages to protest its terrorists from the deadly virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X