ஓமிக்ரான்.. இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் புது கட்டுப்பாடு.. கடுமையான விதிகள்
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு உலகம் முழுக்க புதிய பயண கட்டுப்பாடு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓமிக்ரான் பரவி உள்ள தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் போன்ற நாடுகளில் மொத்தமாக வெளிநாட்டு பயணிகளுக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தியா
இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்படவில்லை. இருப்பினும் இந்தியாவில் ஏற்கனவே கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், கட்டாய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளிட்ட விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

என்ன விதிகள்
இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் விதியின்படி படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் இந்தியா வரும் முன் சுய விவர பார்ம் ஒன்றை அளிக்க வேண்டும். தனக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் வகையிலும், அவர்கள் தங்க போகும் விலாசத்தை குறிப்பிட்டும் இந்த பார்ம் அளிக்கப்பட வேண்டும். இதோடு 36 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

பொருந்தும்
இது அனைத்து நாடுகளில் இருந்தும் இந்தியா வரும் பயணிகளுக்கு பொருந்தும். ஓமிக்ரான் இதுவரை பரவாத வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவிகிதம் பேருக்கு ரேண்டம் கொரோனா டெஸ்ட் செய்யப்படும். இதில் பாசிட்டிவ் என்று வருபவர்களின் கொரோனா சாம்பிள் ஜீன் மாதிரி சோதனை செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மற்றபடி நெகட்டிவ் என்று வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும்.

ரிஸ்க் நாடுகள்
இது தவிர்த்து 12 ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யு.கே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து. ஜிம்பாபே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் நபர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். 14 நாட்களுக்கு முன்பு வரை அவர்கள் பயணித்த நாடுகளின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் .
Recommended Video

டெஸ்ட்
இவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை அளிக்க வேண்டும். அதோடு இவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா சோதனை செய்யப்படும். இதில் நெகட்டிவ் என்று சோதனை முடிவு வருபவர்களுக்கு 7 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்துதல் கட்டாயம். 8வது நாள் மீண்டும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும். இதில் பாசிடிவ் என்று வருபவர்களின் சாம்பிள் ஜீன் சோதனைக்கு உள்ளாக்கப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications