உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு- மாஸ்க் போடுங்க.. கைகளை கழுவுங்க.. பிரதமர் மோடி அட்வைஸ்
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாட்டு மக்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன்கிபாத்தில் இன்று உரையாற்றினார். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 661,530,316 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் நேற்று ஒருநாள் மட்டும் 393,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 6,685,247 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
தற்போது ஜப்பான், தென்கொரியா, தைவான், பிரான்ஸ், ஹாங்ஹாங்கில் கொரோனா பரவல் அதி உச்சமாக உள்ளது. ஜப்பானில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 177,622 ஆக இருக்கிறது. தென்கொரியாவில் 66,049, பிரான்ஸில் 40,744 என ஒருநாள் கொரோனா பாதிப்பு உள்ளது.

சீனாவில் நிலைமை மோசம்
உலகிலேயே சீனாவில்தான் மிக மோசமான கொரோனா பாதிப்பும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன. சீனாவின் மயானங்கள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் சிகிச்சை தர முடியாமல் மருத்துவர்கள் திணறுகின்றனர். இதனால் கொரோனா பரவல் எண்ணிக்கையையே அறிவிப்பதை சீனா நிறுத்திவிட்டது.

பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்நிலையில் பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசுகையில், உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என கவலை தெரிவித்தார். மேலும் கொரோனா பரவலைத் தடுக்க நாம் கவனமுடன் இருக்க வேண்டும்; அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்; கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

காலா அசார் - கருங்காய்ச்சல் எச்சரிக்கை
கங்கை சமவெளியில் தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பங்களித்து சிறப்பாக செயல்பட்ட கங்கா தூத், கங்கா பிரஹாரிக்கு நன்றி: நாளை டிசம்பர் 26, புது தில்லியில் சாஹிப்ஜாதாக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வீர்பால் திவாஸ் விழாவில் கலந்துகொள்வதைப் பெருமையாக கருதுகிறேன். மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை, யோகாவும் ஆயுர்வேதமும் ஆதாரப்பூர்வமாக ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் டாடா ஆராயச்சி மையம், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளது. அவர்கள் தங்கள் ஆய்வை ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளனர். காலா அசார் என்னும் கருங்காய்ச்சல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கலாம். சமீப காலம் வரை, 4 மாநிலங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காலா-அசார் நோய் பரவியுள்ளது எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

கொரோனா தடுப்பூசிகளில் சாதனை
அடல் பிஹாரி வாஜ்பாய் நாட்டிற்கு சிறப்பான தலைமையை வழங்கிய அரசியல்வாதி. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் அவருக்கு தனி இடம் உண்டு: 2022-ம் ஆண்டில் தான் பாரதத்தின் முதல் சுதேசி விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கடற்படையில்
இணைக்கப்பட்டது. நான் உலக ஆயுர்வேத காங்கிரஸில் கோவாவில் இருந்தேன், மேலும் 40+ நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 215+ நிறுவனங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. 1 லட்சம் + நபர்கள் ஆயுர்வேதம் தொடர்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். 2022-ம் ஆண்டு உலக அளவில் இந்தியாவுக்கான தனித்துவ அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளாம், 220 கோடி தடுப்பூசிகளின் நம்பமுடியாத சாதனையை அடைந்துள்ளோம் மற்றும் ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர் சாதனையைப் படைத்தது. இந்த ஆண்டிலே தான்,பாரதம் தான் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது, அமிர்த காலமும் தொடங்கியது. உண்மையில் 2022-ம் ஆண்டு மக்களுக்கு பல வழிகளில் ஊக்கமளித்துள்ளது என்றார் பிரதமர் மோடி.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications