கொரோனா 2ஆம் அலை மே இறுதியில் படிப்படியாக குறையும் - வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் நம்பிக்கை
கொரோனா இரண்டாம் அலை சுனாமியாக வீசி வரும் நிலையில் மே இறுதியில் படிப்படியாக வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கும் என்று பிரபல வைராலஜிஸ்ட் ககன் தீப் காங் கூறியுள்ளார்.
டெல்லி: மே மாத மத்தியில் அல்லது மே மாத இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் என்றும் பிரபல வைராலஜிஸ்ட் ககன் தீப் காங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வைரஸ் வேகம் எந்த அளவிற்கு வேகமாக பரவுகிறதோ அந்த அளவிற்கு படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார். கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் நோயைத் தடுப்பதில் நல்ல பாதுகாப்பை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் என்ற கொடூர அரக்கனுக்கு நாடு முழுவதும் தினசரியும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரியும் 4 ஆயிரம் பேர் மரணமடைந்து வருகின்றனர். சுனாமியாக வீசத் தொடங்கியுள்ளது கொரோனா. நோயின் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்று எவராலும் சொல்ல முடியவில்லை.

இரண்டாம் அலை முடியும் முன்பே கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகுங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மே மாத மத்தியில் அல்லது இறுதியில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கும் என்று வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பல பரவல் மாதிரிகளின் அடிப்படையில் யூகித்தால் மே மத்தியில் அல்லது மே இறுதிவாக்கில் கொரோனா பரவல் குறையத் தொடங்கும். ஒரு சில கணக்கீட்டு மாதிரிகளின் படி ஜூன் மாத தொடக்கத்திலிருந்து இந்த இரண்டாம் அலையின் வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால் நாங்கள் பார்க்கும் மாதிரியின் படி மே மாத மத்தியில் அல்லது மே மாத இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் என்று மதிப்பிடுகிறோம்.
இந்த முறை முதல் அலை போல் இல்லாமல் நடுத்தர மக்களையும் ஊரக மக்களையும் அதிகம் பாதிக்கிறது. முதல் அலையைக் காட்டிலும் மூன்று நான்கு மடங்கு இது தீவிரமடைந்துள்ளது, ஆனால் எவ்வளவு வேகமாக தீவிரமடைகிறதோ, அவ்வளவு வேகமாக குறையவும் தொடங்கும் என்று கூறியுள்ளார் ககன்தீப் காங்.
கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் நோயைத் தடுப்பதில் நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. நோய்த்தொற்றை நல்ல விதத்தில் தடுக்கின்றன. தொற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொண்டால் நாம் அடுத்தவர்களுக்கு பரப்பும் வாய்ப்பும் இல்லை. எனவே தடுப்பூசிகள் தீவிர நோய் ஏற்படுதல் மற்றும் மரணத்திலிருந்து காக்கவே செய்கிறது. தொற்றைத் தடுக்கிறதோ இல்லையோ, தொற்றை நிச்சயமாகக் குறைக்கிறது என்றும் கூறியுள்ளார் ககன்தீப் காங்.












Click it and Unblock the Notifications