ஆசியாவில் இந்தியா மிக மோசம்.. இன்னும் 1 வாரத்தில் இரட்டிப்பு ஆகும்.. பகீர் கொரோனா புள்ளி விவரம்!
இந்தியாவில் தற்போது பரவும் வேகத்தில் கொரோனா பரவினால் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
டெல்லி: இந்தியாவில் தற்போது பரவும் வேகத்தில் கொரோனா பரவினால் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
Recommended Video
கொரோனா பரவலை உலகம் முழுக்க தீவிரமாக கண்காணித்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் கோவிட் டிராக்கர் (John Hopkins Covid Tracker) மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறை இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் குறித்த [புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எவ்வளவு வேகத்தில் கொரோனா பரவுகிறது என்று இந்த புள்ளி விவரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மத்திய அரசின் புள்ளி விவரத்தின் படி மொத்தம் 11,439 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 390 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

வேகம் எப்படி உள்ளது
கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் கொரோனா 24% உயர்ந்துள்ளது. அதற்கு முன் உள்ள இரண்டு நாட்களில் கொரோனா 28% ஆக பரவியது. இது கொஞ்சம் குறைந்துள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 1010 பேர் வீதம் கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிறது.

இரட்டிப்பு ஆகிறது
ஆம் இந்தியாவில் வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பு ஆகிறது. இதற்கு முன் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா இரட்டிப்பு அடைந்த நிலையில் தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்க கூடிய விஷயம். ஆனாலும் இந்தியா ஆசியாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட மிக மோசமாக இதில் பின் தங்கி உள்ளது.

அண்டை நாடுகளின் நிலை
தென் கொரியாவிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட அதிகமாக உள்ளது. 7 நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவில் 109% கொரோனா ஏற்படுகிறது. இந்தோனேசியா பிரேசில், ஈரான், ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவை விட குறைவான வேகத்தில்தான் கொரோனா பரவுகிறது

தற்போது நிலைமை என்ன
கொரோனா பாதிப்பில் தென் கொரியா, அயர்லாந்து, சுவீடன், பெரு, ஜப்பான், சிலி , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை இந்தியா முந்தி இருக்கிறது. ஆனால் ஆசியாவில் வங்கதேசத்தில் இந்தியாவை விட அதிகமாக கொரோனா பரவுகிறது. வங்கதேசத்தில் 826% கொரோனா வேகம் எடுக்கிறது. இன்னொரு பக்கம் பலி எண்ணிக்கை இந்தியாவில் இதை விட வேகமாக உயர்கிறது.

பலி எண்ணிக்கை
ஆம் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை 5 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. இதுதான் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவில் இதே வேகத்தில் கொரோனா பரவினால் அடுத்த வாரம் 20 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள். இதனால் அடுத்த மாதம் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications