மோசமாகும் நிலை.. 24 மணி நேரத்தில் 28179 கொரோனா கேஸ்கள்.. இந்தியாவில் 10 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28179 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியாவில் மொத்தமாக இதுவரை 907645 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 23727 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 572112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிரா நிலை

அதேபோல் இந்தியாவில் மொத்தமாக 311806 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள் .இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகமான நபர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் மொத்தம் 260924 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 105638 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 144507 பேர் குணமடைந்து உள்ளனர். 10482 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

தமிழ்நாட்டில் மொத்தம் 142798 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 48199 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 92567 பேர் குணமடைந்து உள்ளனர். 2032 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட இருக்கிறது.

டெல்லி நிலை

டெல்லி நிலை

டெல்லி அப்படியே தமிழகம் போலவேதான் இருக்கிறது. டெல்லியில் மொத்தம் 113740 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 19017 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 91312 பேர் குணமடைந்து உள்ளனர். 3411 பேர் பலியாகி உள்ளனர்.

குஜராத் கட்டுப்பாடு

குஜராத் கட்டுப்பாடு

குஜராத் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்த தொடங்கி உள்ளது. குஜராத்தில் மொத்தம் 42808 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 10946 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 29806 பேர் குணமடைந்து உள்ளனர். 2056 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+