இந்தியா கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சத்தை நெருங்கியது - 1172 பேர் மரணம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 95000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 95000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4465864 பேராக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது
இந்தியாவில் 3471784 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 919018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1172 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இந்தியாவில் மொத்தம் 75068 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கனால் உலக அளவில் 3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் 2 கோடி பேர் வரை மீண்டுள்ளனர்.
மருந்துகள் இல்லாத காரணத்தால் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரித்து தொற்றுக்கு உள்ளானவர்களை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்தி தகுந்த சிகிச்சை அளிப்பதே கொரோனாவில் இருந்து மீளும் ஒரே வழியாகும். எனவே உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் குறியாக இருக்கின்றன.
இந்தியாவும் நாளுக்கு நாள் தனது பரிசோதனை வசதியை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது நாளொன்றுக்கு 11 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதிக்கும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது.
பரிசோதனை அதிகரிப்பதால் பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24மணிநேரத்தில் கொரோனாவிற்கு 95ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது என்பது அச்சத்தை அளித்தாலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது சற்றே ஆறுதலை தருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4465864 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 3471784 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 919018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம












Click it and Unblock the Notifications