டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு முழுவதும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்- அமைச்சர் ஹர்ஷவர்தன்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். லட்சக்கணக்கான மக்கள் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Coronavirus vaccine will be free across the country

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஒரு வேளை தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டால் என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிப்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

இன்று தடுப்பூசி போடப்படாது. தடுப்பூசி வந்தால் செயல்படுவதற்கான ஒத்திகையே நிகழ்ந்தது. இந்தியாவில் 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

டெல்லியில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பணிகளை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில் டெல்லியில் மட்டுமின்றி கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளார். பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

English summary
Union Minister Harsh Vardhan says that Coronavirus vaccine will be free across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X