அடேங்கப்பா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர்களுக்கு இவ்வளவு செலவு செய்துள்ளதா நாடு??
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயண செலவு ரூ.2 ஆயிரம் கோடி என தகவல்
டெல்லி: பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவானதாக கூறப்பட்டுள்ளது.
மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே அவர் மீது சொல்லப்பட்டு விமர்சனம் வெளிநாடுகளுக்கு டூர் போவதுதான்.
குறிப்பாக மோடியின் வெளிநாட்டுக்கு பயணத்தை பெருமளவு விமர்சனம் செய்தது எதிர்க்கட்சிகள்தான். சொந்த நாட்டை விட வெளிநாட்டில்தான் மோடி எப்பவுமே இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. அதுவும் இல்லாமல் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மீம்ஸ் போடும் அளவுக்கு பரபரப்பான ஒன்றாகவே ஆகிவிட்டது.

கம்யூனிஸ்ட் கேள்வி
இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பினோய் விஸ்வம் பேசும்போது, "பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார், அதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டு உள்ளது" என்று கேள்வியை எழுப்பினார்.

ரூ.2 ஆயிரம் கோடி
இதற்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளிக்கும்போது, "பிரதமராக பதவியேற்ற இந்த 4 ஆண்டுகளில் மோடி 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார். இதற்காக அரசுக்கு ரூ.2,012 கோடி செலவாகி இருக்கிறது. மோடி பயணம் செய்த தனி ஏர் இந்தியா விமானத்துக்கு பராமரிப்புக்கு மட்டும் ரூ.1,583 கோடி செலவாகி உள்ளது.

பயண செலவு
விமானப் பயணத்துக்கு ரூ.429.28 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட ஹாட்லைனுக்காக ரூ.9.12 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட ஹாட்லைனுக்காக கடந்த 2017 மே மாதம் முதல் 2018, டிசம்பர் வரை செலவிடப்பட்டுள்ளது" என்றார்.

மத்திய அமைச்சர்
தற்போது 5 மாநில தேர்தல் முடிவில் மனம் நொந்து கிடக்கும் இந்த நேரத்தில் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு ஆன செலவை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார். இது எந்த மாதிரியான தாக்கத்தை தரப்போகிறது என்பதும், இந்த செலவிற்கு எதிர்க்கட்சிகள் அளிக்கும் கருத்துக்களும் இனிமேல்தான் தெரியவரும்
-
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications