டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அரசின் அலட்சியத்தால்.. நாடு இப்போது பயங்கரமான விலையை கொடுக்க வேண்டியுள்ளது... சோனியா சாடல்

Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அரசு ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைகளைப் புறக்கணித்ததால் நாடு இப்போது பயங்கர விலையைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா தடுப்பு செயல்பாடு மிக மோசம்.. India அரசாங்கத்தை விமர்ச்சித்த Lancet

    இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் இடைக்கால தலைவர் "சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    Country Paying Horrendous Price For Governments Neglect says Sonia Gandhi

    அதேபோல நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய சோனியா காந்தி, ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைகள் மோடி அரசு வேண்டுமென்றே புறக்கணித்தது. இதற்கான மிகப் பயங்கரமான விலையை நாடு இப்போது கொடுத்து வருகிறது.

    சில அரசியல் காரணங்களுக்காக சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வுகளுக்கு நாட்டில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன. இதுதான் வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணம், நாடு முழுவதும் உள்ள பொதுச் சுகாதார கட்டமைப்பு சரிந்துவிட்டது.

    தமிழகத்தில் ஒரே நாளில் 959 சிறார்களுக்கு கொரோனா.. 30,000 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்புதமிழகத்தில் ஒரே நாளில் 959 சிறார்களுக்கு கொரோனா.. 30,000 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு

    தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் தனது பொறுப்பைக் கைவிட்டுள்ளது. 18 முதல் 45 வயதிற்குட்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி போடும் செலவை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மத்திய அரசு தடுப்பூசி நிதியை செலவழிக்காமல் சென்டரல் விஸ்டா திட்டத்திற்குப் பல ஆயிரம் கோடி செலவு செய்கிறது. தடுப்பூசி செலவுகளை மத்திய அரசே ஏற்றிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசுக்குத் தடுப்பூசி பணிகள் முக்கியத்தனதாகத் தெரியவில்லை.

    தற்போது அனைவருக்கும் தடுப்பூசி மட்டும் தான் தேவை. நாட்டிலுள்ள அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசிகளை மோடி அரசு செலுத்த வேண்டும். இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தையும் மோடி அரசு கூட்டி விவாதிக்கலாம்" என்றார்.

    English summary
    Sonia Gandhi's latest speech about the center's vaccination policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X