அவர் தனி உலகத்தில் வாழ்கிறார் போல.. பாபா ராம்தேவை கடுமையாக விமர்சித்த டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: விளம்பர விஷயத்தில் ரூஹ் அஃப்சா எனும் பிராண்டை பதஞ்சலி நிறுவனம் விமர்சித்திருந்தது. இதனை கண்டித்துள்ள நீதிமன்றம், பாபா ராம்தேவ் தனி உலகத்தில் வாழ்கிறார் என்று விமர்சித்திருக்கிறது.
ஏற்கெனவே இது பற்றிய பஞ்சாயத்து எழுந்தபோது நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு வார்னிங் கொடுத்திருக்கிறது. இருப்பினும் அதை தற்போது பாபா ராம்தேவ் மீறியிருக்கிறார்.

ஹம்டார்ட் நிறுவனத்தின் பிராண்ட்தான் இந்த ரூஹ் அஃபசா. பிரபல இயற்கை பானத்தை தயாரிக்கும் கம்பெனியாக இருக்கும் இந்நிறுவனத்திற்கு எதிராக கடந்த காலங்களில் பதஞ்சலி விளம்பரங்களை வெளியிட்டு வந்திருக்கிறது. பாபா ராம்தேவ் பதஞ்சலியின் ஆயுர்வேத பானங்களை விளம்பரப்படுத்தும்போது இந்நிறுவனத்தின் பிராண்டை கடுமையாக தாக்கியிருக்கிறார். 'இது ஆரோக்கியத்துக்கே தீங்கு விளைவிக்கக்கூடும்' என்று குறிப்பிட்டு, எங்களது தயாரிப்புகளை வாங்குங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதனால் கடுப்பான அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதஞ்சலி விளம்பரத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். மட்டுமல்லாது உடனடியாக இந்த விளம்பரங்களை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பதஞ்சலி தரப்பில் ஆஜராகியிருந்த பாபா ராம்தேவ், இனி இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்றும், இதற்கு முன்னர் நாங்கள் வெளியிட்டிருந்த விளம்பரத்தை நீக்குகிறோம் எனவும் கூறியிருந்தார்.
ஆக இதுதான் வழக்கின் பின்னணி. இப்படி நீதிமன்றத்தில் செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு தற்போது மீண்டும் இதே மாதிரியான விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது பதஞ்சலி நிறுவனம். எனவே மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமித் பன்சால், "பாபா ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார். யாருடைய கட்டுப்பாடிலும் இல்லை" என்று விமர்சித்திருக்கிறார்.
மேலும், "முந்தைய உத்தரவையும், ராம்தேவின் அபிடேவிட்டையும் கணக்கில் கொள்ளும்போது இது வெளிப்படையாக நீதிமன்ற அவமதிப்பாக இருக்கிறது. எனவே பாபா ராம்தேவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அதற்கு முன் இந்த விளம்பரத்தை டெலிட் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனையடுத்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள ராம்தேவ், 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து அடுத்த கட்ட விசாரணை நாளை நடைபெறுகிறது. ஏற்கெனவே பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இப்படி இருக்கையில், தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications