ஜூன் மாதத்தில் கோவேக்சின் '2வது டோஸ்'க்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.. டெல்லி அரசு
டெல்லி: ஜூன் மாதத்தில் டெல்லிக்கு கிடைக்க உள்ள 91,960 டோஸ் கோவாக்சின் இரண்டாவது டோஸ் போட வேண்டியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்., மே மாதத்தில் முதல் ஷாட் பெற்றவர்கள் மற்றும் அதற்கு முன்பு முதல் டோஸ் பெற்று இரண்டாம் டோஸ் போடாமல் தவறவிட்டவர்கள் இரண்டாவது டோஸாக அடுத்த மாதம் போட்டுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில். ஜூன் மாதத்தில் டெல்லிக்கு 91,960 டோஸ் கோவாக்சின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பாரத் பயோடெக்கின் இந்த தடுப்பூசியை 4-6 வார சாளரத்தில் தங்கள் இரண்டாவது டோஸைத் தவறவிடாமல் போட்டுக்கொள்ளலாம். மே 1 அன்று தடுப்பூசி போட்டுக்கொண்ட 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம் என்றார்.

மத்திய அரசின் தடுப்பூசி நெறிமுறையின்படி, கோவாக்சினின் தடுப்பூசி போடுவதற்கு முதல் மற்றும் இரண்டாவது அளவுகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்தது நான்கு வாரங்களாக இருக்க வேண்டும், அதே சமயம் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு குறைந்தது 12 வாரங்கள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் தான் டெல்லி அரசு, கோவேக்சின் 2வது டோஸை அடுத்த மாதம் அளிக்க போவதாக கூறியுள்ளது.
மொத்தம் 91,960 டோஸ் கோவாக்சின் ஜூன் மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும் என மத்திய அரசு டெல்லி அரசிடம் தெரிவித்துள்ளது. இது மே மாதத்தில் டெல்லி பெற்ற கோவாக்சினின் 1.5 லட்சம் அளவை விடக் குறைவு ஆகும். இது குறித்து சிசோடியா கூறுகையில், முதல் டோஸை பெற்றவர்களுக்குத் தேவையான எண்ணிக்கையை விட அதிகமான அளவு கோவாக்சின் கிடைத்தால் மட்டுமே, நாங்கள் புதிதாக முதல் டோஸ்வழங்குவோம். எங்களுக்கு இன்னமும் அதிகமாக கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
டெல்லியில் கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது மருந்து பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடப்பட்ட மையங்கள் பல செயல்படவில்லை. கடந்த புதன்கிழமை அன்று 34,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. டெல்லிக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைத்தால், ஒரு நாளைக்கு 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட விரிவான திட்டம் டெல்லி அரசிடம் உள்ளது என்று சிசோடியா கூறினார்.












Click it and Unblock the Notifications