இந்த மாத இறுதியில் தமிழகம் & புதுச்சேரியில்.. கொரோனா 2ஆம் அலை உச்சத்தை தொடும்.. வல்லுநர்கள் அறிக்கை
டெல்லி: தமிழகம் பஞ்சாப், அசாம் போன்ற பெரிய மாநிலங்களில் வரும் நாட்களில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தைத் தொடும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாகக் கடந்த மே 7ஆம் தேதி தினசரி கொரோனா 4.14 லட்சம் வரை சென்றது. தற்போது கடந்த சில நாட்களாக தான் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் சில ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நாட்டில் ஏற்படும் கொரோனா பாதிப்பை டிராக் செய்து வருகின்றனர். இது சூத்ரா (SUTRA ) மாடல் என்று அழைக்கப்படுகிறது.
இதில் தமிழகம் பஞ்சாப், அசாம் போன்ற பெரிய மாநிலங்களில் வரும் நாட்களில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தைத் தொடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் மே 29-31 தேதிகளிலும், புதுச்சேரியில் 19-20 தேதிகளிலும் கொரோனா உச்சமடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2ஆம் அலை உச்சத்தைத் தொட்டுவிட்டது. இப்போது அந்த மாநிலங்களில் வைரஸ் பரவல் குறையத் தொடங்கியுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த மே 4ஆம் தேதி கொரோனா பாதிப்பு உச்சமடைந்ததாகவும், அதன் பிறகு கொரோனா பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications