Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் வேகம்! இந்தியாவில் ஒரே நாளில் 40% அதிகரித்த கொரோனா.. அடுத்த அலையின் தொடக்கமா? அறிகுறிகள் என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது 4ஆவது அலையின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    மிதமான வேகத்தில் கொரோனா! தினமும் இருமுறை விசாரிக்கும் முதல்வர்! - ராதாகிருஷ்ணன்

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டு இருந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக அதில் தீவிர பாதிப்புகள் ஏற்படாத நிலையில், பாதிப்புகளும் லேசாகவே இருந்தது.

    அதன் பின்னர் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

     கவலை

    கவலை

    சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு, தினசரி பாதிப்பு நேற்று 5 ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. நேற்று 5,233 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று புதிய பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 7240 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இது நேற்றைக் காட்டிலும் 40% அதிகமாகும். கடந்த மார்ச் 2ஆம் தேதி தினசரி பாதிப்பு 7,554ஆக இருந்த நிலையில், இப்போது 3 மாதங்களுக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு மீண்டும் 7 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இது 4ஆவது அலையின் தொடக்கமாக இருக்குமோ என்றும் பலரும் சந்தேகிக்கின்றனர்.

     கவலை வேண்டாம்

    கவலை வேண்டாம்

    இருப்பினும், வைரஸ் பாதிப்பு இப்போது அதிகரிப்பது அடுத்த 19 அலையின் தொடக்கத்திற்கான அறிகுறி இல்லை என்றே பெரும்பாலான வல்லுநர்கள் நம்புகின்றனர். கொரோனா வைரசின் திரிபுகள் இரண்டாவது முறையாகக் கடுமையான தொற்றுநோயைப் ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வரும் காலங்களில் புதிய அலை ஏற்பட்டாலும் அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவு எனக் குறிப்பிட்ட டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, மாஸ்க் அணிவது போன்ற தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் 4ஆம் அலை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றார்.

     எய்மஸ் பேராசிரியர்

    எய்மஸ் பேராசிரியர்

    டெல்லி எய்மஸ் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் கூறுகையில், "கொரோனா போன்ற ஆர்என்ஏ வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே தான் இருக்கும். இருப்பினும் தீவிர பாதிப்பு உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு. இதுபோன்ற வைரஸ்கள் விரைவாக முடிவடையாது. வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதும் குறைவதும் தொடரும். இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளுடன் ஒப்பிடுகையில், அந்தளவு மோசமான நிலை ஏற்படாது. நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்" என்றார்.

     கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

    கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

    கொரோனா அறிகுறிகள் சற்று மாறிக் கொண்டே தான் இருக்கிறது. இப்போது தும்மல், இருமல், அதிக காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் ஒருவர் கவனிக்க வேண்டும். ஒருவருக்கு 2-3 நாட்களாக வேறு எந்த உடல்நலக் கோளாறும் இல்லாமல் உடல் வலி ஏற்பட்டால் கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பசியின்மை, கவனமின்மை, எரிச்சல், மார்பு, தடிப்புகள், கை-கால் வலி கொரோனா வைரசின் பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

     என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்தியா மட்டுமின்றி உலகின் சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இருப்பினும், வேக்சின் உள்ளிட்ட தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் ஓமிக்ரான் கொரோனாவின் BA5 வகை காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+