இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு 2.59 லட்சம் பாதிப்பு 3.57 லட்சம் பேர் மீண்டனர்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 2,59,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,57,295 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரியும் கொரோனாவால் 4 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,59,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,57,295 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொத்து கொத்தாக பரவி வரும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

2.59 லட்சம் பேர் பாதிப்பு
கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 2,59,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,60,31,991 பேராக உயர்ந்துள்ளது.

2,27,12,735 பேர் மீண்டனர்
ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 2,27,12,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 30,27,925 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2.91 லட்சம் பேர் மரணம்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 4,209 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,91,331 பேராக அதிகரித்துள்ளது.

17,27,10,066 தடுப்பூசி
கொரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மே 20ஆம் தேதி வரை 19,18,79,503 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications