டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பசுமை மண்டலங்களில் ஊரடங்கு தளர்வு திட்டங்கள்! சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாட்டு உத்திகள்.. தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பசுமை மண்டலங்களில் ஊரடங்கு தளர்வு திட்டங்களையும், சிவப்பு மண்டல பகுதிகளில் கட்டுப்பாட்டு உத்திகளையும் உருவாக்க மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. வரும் மே 4ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

    பிரதமர் மோடி, இந்த வாரம் மாநில முதல்வர்களுடனான கலந்துரையாடலின் போது, கோவிட் -19 (கொரோனா) பரவலை மூன்று மண்டலங்களாக வகைப்படுத்தி லாக்டவுனை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுக்கொண்டார்.

    பிரதமரின் கூற்றுப்படி, வரவிருக்கும் நாட்களில் 'சிவப்பு மண்டலங்கள்' அல்லது கட்டுப்பாட்டு மண்டலத்தில் கடுமையான லாக்டவுன் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும் . 'ஆரஞ்சு மண்டலங்களில்' கடுமையான விழிப்புணர்வு இருக்க வேண்டும். அதே நேரத்தில் 'பசுமை மண்டலங்களில்' பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க மாநிலங்கள் திட்டமிடலாம்.

    அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டம்.. ஒரே நாளில் 2390 பேர் பலி, உயிரிழப்பு 61000 ஆக அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டம்.. ஒரே நாளில் 2390 பேர் பலி, உயிரிழப்பு 61000 ஆக அதிகரிப்பு

    பசுமை மண்டலங்கள்

    பசுமை மண்டலங்கள்

    இப்போது, ​​பெரிய கேள்வி என்னவென்றால், மே 3 க்குப் பின் லாக்வுடன் தொடர வாய்ப்புள்ள இந்த சிவப்பு மண்டலங்களை (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) தீர்மானிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எவ்வாறு, என்ன அளவுகோல்களைப் பின்பற்றுகின்றன என்பது தான். இந்தியாவில் கோவிட் -19 தொற்று (கொரோனா) ஹாட்ஸ்பாட் மாவட்டங்களின் எண்ணிக்கை பதினைந்து நாட்களுக்கு முன்பு 170 ல் இருந்து 129 ஆக குறைந்துள்ளது, ஆனால் அதே காலகட்டத்தில், தொற்று இல்லாத மாவட்டங்கள் அல்லது பசுமை மண்டலங்களின் எண்ணிக்கையும் 325 லிருந்து 307 ஆக குறைந்துள்ளது.

    எப்படி நிர்ணயம்

    எப்படி நிர்ணயம்

    ஏப்ரல் 15 அன்று, மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதாவது கொரோனா ஹாட்ஸ்பாட் அல்லது கோவிட் -19 கொத்துக்கொத்தாக பரவல் ஆகியவை குறித்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அளவுகோல்களின்படி தீர்மானிக்கப்படும் என்று கூறியிருந்தது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஹாட்ஸ்பாட்கள், கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளூர் நிர்வாகத்தால் வரையறுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகமும் தெளிவுபடுத்தி இருந்தது.

    மக்கள் நடமாட்டம்

    மக்கள் நடமாட்டம்

    இந்த வழிகாட்டுதல்களின்படி, அத்தியாவசிய சேவைகளை தவிர, இந்த மண்டலங்களில் வேறு எதற்கும் அனுமதி இல்லை. மக்கள் வெளியேறவும் உள்வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உள்துறை அமைச்சகம்

    உள்துறை அமைச்சகம்

    இதற்கிடையே உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று டிவிட்டரில், ஊரடங்கு நிலை குறித்து விரிவான மறு ஆய்வு கூட்டத்தை இன்று மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தியது. இதில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு நிலையால் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள ஊரடங்கு நடைமுறை விதிகளை மே.3 ஆம் தேதிவரை பின்பற்ற வேண்டும். மே 4 ம் தேதியிலிருந்து என்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து வரும் நாட்களில் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    பசுமை மண்டலங்களில் ஊரடங்கை தளர்த்த மாநில அரசுகள் திட்டம்

    English summary
    Covid-19: states can plan for resumption of economic activity in 'Green Zones'., containment strategies for red zones. What are they?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X