விஸ்வரூபம்.. எகிறும் வைரஸ்களின் பாதிப்புகள்.. இந்தியாவில் 3வது அலை பரவல் குறித்து வெளியான தகவல்
3வது அலை இந்தியாவில் வர உள்ளதாக கூறப்படுகிறது
டெல்லி: கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி உள்ளது.. இதையெல்லாம் பார்க்கும்போது, 3 வது அலை விரைவில் ஏற்படும் என்றே தான் நினைப்பதாக, நோய் எதிர்ப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் டாக்டர் என்கே அரோரா தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் ஒமிக்ரான் என உலக நாடுகளை வைரஸ்கள் மிரட்டி கொண்டிருக்கின்றன..
இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகள் முழுவீச்சில் இறங்கி விட்டன. அந்த வகையில் இந்தியாவிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்கள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி விட்ட நிலையில், இந்தியாவில் 3வது அலை தொடங்கியிருப்பதை சுட்டிக்காட்டியிருப்பதாக நிபுணர்கள் காட்டினாலும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

டெல்டா
இதில், டெல்டாவை விட பல்வேறு மாறுபாடுகளை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டது... தென் ஆப்ரிக்காவில் சுமார் 2 மாதத்திற்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த வைரஸ், இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது... உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன..

இந்தியா
இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் 3வது அலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தபடியே உள்ளது.. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்... எனினும், இந்தியாவில் ஒமைக்ரான் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, நோய் எதிர்ப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா விளக்கம் அளித்துள்ளார்.

3வது அலை
அவர் சொல்லும்போது, "கடந்த ஒரு வாரமாகத்தான் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது... இது 3வது அலையை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இப்படித்தான், முக்கிய நாடுகளிலும் திடீரென ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துவிட்டது.. ஆனால் நாம் பதற்றம் அடைய தேவையில்லை... நாட்டில் 80 சதவீதம் பேருக்கு இப்படிப்பட்ட வைரஸ் தாக்குதல் அவர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ ஏற்படலாம்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில்,2 வாரங்களுக்கு ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தது... அதற்கு பிறகு படிப்படியாக குறைந்து விட்டது... பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியவில்லை. எப்படியும் ஒமிக்ரான் பரவல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்று தெரிகிறது..

பாதிப்பு
இந்தியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் இயற்கையாகவே ஒமைக்ரான் அதிகரித்துள்ளது. இந்த இரு நாட்டில் இருப்பவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.. கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக அதிகரித்துள்ளது. இதைப் பார்க்கும்போது, 3 வது அலை விரைவில் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.. தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்கள் ஒமைக்ரான் பற்றி அச்சப்படத் தேவையில்லை. அதேநேரம் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக நாம் பின்பற்ற வேண்டும்.

வடஅமெரிக்கா
வட அமெரிக்காவில், தினமும் 10 லட்சம் கேஸ்கள் பதிவாகின்றன... பிரான்சில் ஒரு நாளில் 2.5 லட்சமும், சுவிட்சர்லாந்தில் 20,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் நாங்கள் இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை பற்றி எதுவுமே உறுதியாக சொல்ல முடியாது. இப்போது, டெல்டா அல்லது டெல்டா பிளஸ் மாறுபாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் ஒமிக்ரான் இதுவரை இவ்வளவு இறப்புகளை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
Recommended Video

பாதிப்பு
தடுப்பூசிகள் சற்று பயனற்றவையாக மாறிவிட்டன, மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் கூட ஓமிக்ரானால் பாதிக்கப்படுகின்றனர்... உலகம் முழுவதும் சுமார் 28 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, நமது விஞ்ஞானிகள் அவற்றில் பணியாற்றி வருகின்றனர்... லாக்டவுன் விதிப்பது சரியான முடிவாக இருக்காது. அதற்கு பதிலாக, கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications