மார்ச் 16ம் தேதி முதல்.. 12 முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 46 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு முதல் அலையில் தொடங்கிய கொரோனா பல அலைகள் வீசியுள்ளது. 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

உலக மக்கள் இன்னமும் கொரோனாவின் பிடியில் இருந்து மீளாமல் உள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2500ஆக குறைந்தாலும் கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. இந்தியா முழுவதும் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் முன்களப்பணியாளர்கள் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட், கோவாக்ஸின் தடுப்பூசிகள் நாடு முழுவதும் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி (Covid Vaccine) வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி பாதுகாப்பு இயக்கம் மேலும் விரிவடைகிறது.
இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications