ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி ....விரைவில் பயன்பாட்டுக்கு வரும்!
டெல்லி: ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசியானது இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் நமது நாட்டில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் V தடுப்பூசி ஓரிரு மாதங்களில் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியதாக உள்ளது. இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்தான் மிக அதிவேகத்தில் பரவி வருகிறது.

ஸ்புட்னி V தடுப்பூசி
அதேநேரத்தில் கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் ரஷ்யாவின் ஸ்புட்னி V தடுப்பூசியை பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்தியாவில் எப்போது கிடைக்கும்?
தற்போதைய நிலையில் ரஷ்யா தயாரிப்பு ஸ்புட்னிக் V தடுப்பூசியானது இம்மாதம் இறுதி முதல் ஜூன் மாதம் வரை பயன்படுத்தப்படலாம்; இதையடுத்து உள்நாட்டிலேயே பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வரும் ஸ்புட்னிக் V தடுப்பூசியானது ஜூலை முதல் செப்டம்பருக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்கின்றனர் இதனை தயாரித்து வரும் டாக்டர் ரெட்டி நிறுவன மருத்துவர்கள்.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி
முதல் கட்டமாக ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் V தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்த தடுப்பூசிகளை மே முதல் வாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா அனுப்பி வைக்கக் கூடும்.

ஸ்புட்னி V தடுப்பூசி சிறப்புகள் என்ன?
ஸ்புட்னிக் V தடுப்பூசியானது 91.6% கொரோனாவை தடுக்கும் வலிமை கொண்டது. இந்தியாவில் ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்பட உள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக ஸ்புட்னிக் V தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். சர்வதேச சந்தையில் ஸ்புட்னி V தடுப்பூசி விலை ஒரு டோஸ் 10 அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications