போச்சு.. கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு குரல் இழப்பு ஏற்படுகிறதா.. உண்மை என்ன? கலங்கும் மக்கள்
தொற்று பாதிப்பு இருந்தால் குரலிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பிறகும், சிலருக்கு குரல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.. இது நம் மக்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.
இந்த கொரோனாவைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்தே மக்கள் பீதியிலேயே உள்ளனர்.. காரணம் இதற்கு இதுவரை எந்தவித மருந்தும் சிகிச்சையும் இல்லாததுதான்.
இது என்ன விதமான வைரஸ் என்ற ஆராய்ச்சிகளும் கண்டுபிடித்து முடியவில்லை.. அதற்குள் வைரஸின் பல பரவல்கள் வேகமெடுத்து வருகின்றன.

பாதிப்பு
இதனிடையே தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கும்கூட, சில பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. மனக்கவலை, மன அழுத்தக் கோளாறு, பொதுவான மனக்கவலை பிறழ்வு, மன உளைச்சலுக்கு பிந்தைய பாதிப்பு, அச்சம் போன்றவைகள் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஏற்படும் என்று கூறப்பட்டது.

கருப்பு பூஞ்சை
அதேபோல, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் கருப்பு பூஞ்சை தொற்று அரிதாக ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பூஞ்சை பாதிப்பு உண்டாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.. மேலும், கொரோனா தொற்று சுவாச பாதையையே பெருமளவு தாக்கினாலும் நரம்பு மண்டலத்திலும் சில பாதிப்புகளை சிலருக்கு ஏற்படுத்துகிறது.. அதனால்தான் இவர்களுக்கு மறதி அடிக்கடி ஏற்படும் என்று சொன்னார்கள்.

தற்காலிக குரலிழப்பு
இப்படி நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் தாக்கம் மக்களை கலங்கடித்து வருகிறது.. இப்போது இன்னொரு உண்மை தெரியவந்துள்ளது.. கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்காலிகமாக குரல் இழப்பு ஏற்படுகிறதாம்.. அவர்கள் குரலை இழந்தும் விடுகின்றனராம்.. இது கொல்கத்தா வரை ஊடுருவியும் உள்ளது.. கொரோனா வைரஸினால் தொண்டை பாதிக்கப்படுவதையடுத்து சிலருக்கு தற்காலிகமாக குரல் இழப்பு, பேச்சின்மை ஏற்படுகிறது..

சுவாசப்பாதையை
குரல் கரகரப்பாவதும், குரல் ஒலி அளவு குறைவதும், சிலருக்கு சில வாரங்களுக்கு பேச்சே வருவதில்லை என்றும் தொடர் புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன... தொற்று பாதிப்பு ஏற்பட்டால், சுவாசப்பாதையை கடுமையாக பாதிக்கிறது.. அதனால்தான், குரல்வளை அழற்சி ஏற்படுகிறது... இது சிலருக்கு உடனடியாக ஏற்பட்டு குரல் முற்றிலும் இழக்கப்படுகிறது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
Recommended Video

குரல்வளை
கொரோனா பாதித்து முதல் வாரம் முதல் 3ம் வாரம் முதல் 3 மாதங்கள் வரை குரலிழப்பு இருக்க வாய்ப்புள்ளதாம்.. திடீரென குரலை இழக்கும் இந்த நோய்க்கு கோவிட் வாய்ஸ் என்று பெயர் சொல்கிறார்கள். அதேசமயம், கொரோனாவால் இப்படி ஆவதில்லை என்றும், குரல்வளையில் கிருமி தொற்றினால் கட்டு ஏற்பட்டு அதன்மூலம் பேசும் திறன் இழக்க நேரிடுகிறது என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications