18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட இன்று முதல் கோவின் செயலியில் முன்பதிவு தொடக்கம்!
டெல்லி: நாடு முழுவதும் மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கவுள்ள நிலையில் அதற்காக கோவின் செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

45 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக காணபல்படுகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோரையும் ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளுக்கு வரவழைத்தால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிவிடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருதினர்.
இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொள்ள கோவின் செயலி அல்லது ஆரோக்கியா சேது செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகளில் முன்பதிவு செய்பவர் ஒரே நேரத்தில் 4 குடும்ப உறுப்பினர்களுக்கு முன்பதிவு செய்யலாம். பயனாளர் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அரசு அல்லது தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
அங்கு தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை பொருத்து புக் செய்து கொள்ளலாம். ஒருமுறை தடுப்பூசி போட பயனாளி முன்பதிவு செய்துவிட்டால் நேரத்தையோ இடத்தையோ மாற்றிக் கொள்ள ஆப்ஷன் உள்ளது. அது போல் ஸ்டால்ட்டை ரத்து செய்யவும் அவர் அனுமதிக்கப்படுவார். இவ்வாறு செயலி மூலம் முன்பதிவு செய்து குறித்த நேரத்தில் செல்வதால் கூட்டமின்றி சமூக இடைவெளியை எளிதாக கடைப்பிடிக்க முடியும்.












Click it and Unblock the Notifications