அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கமா? அனுமதியை ரத்து செய்ய லோக்சபாவில் வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்!
டெல்லி: மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி வர்லாற்றுச் சிறப்புமிக்க அரிய வகை நிலம்; கீழடியில் 10 அடிக்கு குழி தோண்ட அனுமதிக்காத மத்திய அரசு வரலாற்று வளம் கொண்ட அரிட்டாபட்டியில் பல நூறு கிலோ மீட்டருக்கு டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட அனுமதிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று லோக்சபாவில் சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
லோக்சபாவில் சு.வெங்கடேசன் எம்பி பேசியதாவது: மத்திய அரசு மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதித்திருக்கிறது . அந்த அனுமதியை ஏல உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அரிய வகை நிலம் அரிட்டாபட்டி நிலம் .
இங்கே 3500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால படுக்கை இருக்கிறது.
2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டு இருக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணச் சிற்பம் இருக்கிறது.
1200 ஆண்டுகளுக்கு முந்தைய முற்காலப் பாண்டியர்கள் கட்டிய சிவன் குடைவரைக் கோவில் இருக்கிறது.
800 ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலப் பாண்டியர்கள் அமைத்த ஏரி இருக்கிறது.
வரலாறு முழுக்கத் தனது மேனியில் வரலாற்றுச் சின்னங்களை ஏந்தியிருக்கிற அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற மத்திய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும்.
அரிட்டாபட்டி கல்வெட்டில் இமையன் என்கிற சொல் இருக்கிறது. இமையம் எப்படி இந்தியாவைக் காக்கிறதோ அதேபோல இமையன் என்ற சொல் இருக்கிற அரிட்டாபட்டி நிலத்தை நாங்கள் காத்து நிற்போம் என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழடியிலே பத்து அடி குழி தோண்ட தொல்லியல் துறைக்கு அனுமதி கொடுக்காத மத்திய அரசு , இன்றைக்கு தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் பல நூறு கிலோமீட்டர் சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கிறது என்றால் தமிழ்நாட்டினுடைய வளத்தையும் வரலாற்றையும் ஒருசேர அழிக்கிற இந்த முயற்சியை தமிழ்நாடு மக்கள் எதிர்ப்பார்கள் . மதுரை மக்கள் எதிர்ப்பார்கள் . அங்கே இருக்கிற அனைத்து கிராமங்களிலும் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பேசினார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications