பாவம் அவர் என்ன செய்வார்? லோக்சபா சபாநாயகர் ஆப்சென்ட் விவகாரம்.. பாஜக மீது சு.வெங்கடேசன் விமர்சனம்
டெல்லி: கடந்த 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒருநாள் கூட முழுமையாக நடைபெறாமல் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவைக்கு வருவதை சபாநாயகர் ஓம் பிர்லா தவிர்த்துள்ளார். இதற்கு பாஜகதான் காரணம் என சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

தொடக்கம் முதல் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்ப, ஆளும் கட்சி எம்பிக்கள் அதற்கு எதிராக முழக்கமிட நாடாளுமன்றத்தில் அமளி உருவானது. அப்போது தொடங்கி தற்போது வரை அவை முழுமையாக செயல்படாமல் முடங்கியுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதம் 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் மக்களவையில் அமளி ஓயாததால் நேற்று முழுநாள் சபாநாயகர் ஓம்பிர்லா மக்களவைக்கு வரவேயில்லை. இதனால் பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி அவையை நடத்தினார். அமளி காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் அவைக்கு ஓம் பிர்லா வரவில்லை. எம்பிக்களின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்ததாகவும், கண்ணியத்துடன் நடந்துக்கொள்ளும் வரையில் தான் அவைக்கு வரவில்லை என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், "சாபநாயகர் அவைக்கு வராமல் இருப்பதற்கு பாஜகவின் செயல்பாடுகள்தான் காரணம்" என்று விமர்சித்துள்ளார். அதாவது, "மக்களவையின் மாண்பு குலைக்கப்படுவதால் சபாநாயகர் அவைக்கு வரப்போவதில்லை என்று செய்திகள் கூறுகின்றன. பிரதமர் அவையை மதித்து வருவதேயில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபின் மரபுக்கு எதிராக பல மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆளுங்கட்சி அனைத்தையும் மீறுகிறது. அவர் என்ன செய்வார்?" என்று கேள்வியெழுப்பி பாஜகவை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
பொதுவாக நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் பங்களிப்போடுதான் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது. அதாவது மத்திய அரசு தாக்கல் செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு இருப்பின் அதை நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்புவது மரபு. அங்கு எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்து விவாதிப்பார்கள். இதனையடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 150 மசோதாக்கள் விவாதமே இன்றி நிறைவேற்றப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மசோதாக்களை நிலை குழுவுக்கு அனுப்பும் நடைமுறை இந்த காலத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா, டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா இதுபோன்று விவாதமே இல்லாமல் நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது.
ஏற்கெனவே, கூட்டுறவு சொசைட்டி மசோதா இப்படியாகதான் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரத்தில் கை வைக்கிறது என்று பல அரசியல் கட்சிகள் விமர்சித்தன. இதேபோல தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய நர்ஸிங் ஆணைய மசோதா ஆகியவை மரபுக்கு எதிராக விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications