அவன் + அவள் + அது.. ஃப்ரிட்ஜ் கிண்ணத்தில் மிதந்த கணவர்.. "வடியும்" வரை காத்திருந்த மனைவி.. ஹய்யய்யோ
கணவனை வெட்டி கூறுபோட்டு ப்ரிட்ஜில் வைத்த மனைவியை போலீசார் விசாரித்து வருகிறார்கள்
டெல்லி: கணவரை வெட்டி கூறுபோட்டு ஃபிரிட்ஜில் வைத்த மனைவியும், அவரது மகனும் எப்படி போலீசில் சிக்கினார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாகவே, டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளவில்லை.. ஒரு இளைஞர், இந்த அளவுக்கு கொடியவராக இருக்க முடியுமா? இப்படியெல்லாம்கூட யோசிக்க முடியுமா என்று மிரள வைத்துகொண்டிருக்கிறார் அப்தாப்.
தன் காதலியை வெட்டி துண்டாக்கி எங்கே வீசினாரோ தெரியவில்லை.. அந்த உடல் பாகங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.. அப்படி உடல்பாகங்களை தேடி சென்றபோதுதான், சில உடல்பாகங்கள் கிடைத்தன..

பீஸ் பீஸ்ஸா
அவைகளை டெஸ்ட் செய்ய லேப்புக்கு அனுப்பி இருக்கிறார்கள்.. அப்போதுதான், வேறு ஒரு பகீர் கிளம்பி வந்துள்ளது.. துண்டு துண்டாக கிடைத்த உடல்பாகங்கள், ஷ்ரத்தாவினுடையது இல்லை என்று தெரியவந்ததும் அதிர்ந்து போய்விட்டார்கள்.. அப்படியானால், அது யாருடைய உடல்பாகம் என்ற அடுத்தக்கட்ட ஆராய்ச்சியிலும், விசாரணையிலும் இறங்கினார்கள்.. ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை.. கடைசியில் உடல்பாகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருக்கும் சிசிடிவியை ஆராய்ந்தனர்.. அப்போதுதான், வசமாக சிக்கினார் பூனம் என்ற பெண்.. யார் இவர்?

2 புருஷன்
பூனம் என்பவருக்கு 2 கணவன்கள்.. முதல் கணவன் பெயர் கல்லு.. இவர்களுக்கு பிறந்த மகன் தீபக்.. ஆனால், உடம்பு சரியில்லாமல், கடந்த 2016-ல் கல்லு இறந்துவிட்டார். அவர் இறந்த அடுத்த வருடமே, அஞ்சன் தாஸ் என்பவரை 2வது கல்யாணம் செய்துள்ளார் பூனம்.. இந்த அஞ்சன்தாஸுக்கும் ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. இவரது குடும்பம் பீகாரில் இருக்கிறது. முதல் மனைவிக்கும் அஞ்சான் தாஸுக்கும் மொத்தம் எட்டு குழந்தைகளாம்.. ஆனால், அவர்கள் எல்லாரையும் அம்போவென தவிக்கவிட்டுட்டு, பூனத்தை 2வது கல்யாணம் செய்து கொண்டார். எந்த வேலைக்கும் போக மாட்டாராம்..

ஏகப்பட்ட உறவு
எப்பவுமே வீட்டில் உட்கார்ந்துகொண்டு, பூனத்துடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம்.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே 2 மனைவிகள் இருந்தாலும், தாஸுக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்துள்ளது.. இதெல்லாம் பார்த்து பொறுமையிழந்த நிலையில், பூனமும், தீபக்கும் அஞ்சான் தாஸை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.. அதன்படி, சம்பவத்தன்று தாஸுக்கு, மதுவில் தூக்க மாத்திரை கலந்து தந்து தூங்க செய்துள்ளனர்... அதற்கு பிறகு, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர்... உடலை வெட்டிக் கொன்றதால், ரத்தம் பீறிட்டு வெளிவந்திருக்கிறது..
அதனால், ரத்தம் முழுவதும் வடியும் வரை வீட்டிலேயே உடலை வைத்துள்ளனர்... அதற்கு பிறகு, பொறுமையாக, சடலத்தை எடுத்துவைத்துக் கொண்டு, 10 துண்டுகளாக வெட்டியுள்ளனர்... பிண வாடை வீசக் கூடாது என்பதற்காக, வெட்டிய உடலை, ஃபிரிட்ஜில் வைத்து மூடியுள்ளனர்... பிரிட்ஜில் வைத்திருந்த உடல்களை ஒவ்வொன்றாக பாண்டவ நகர் பகுதியில் எடுத்து வீசியுள்ளனர்.. இதற்கு பிறகுதான் போலீசுக்கு விஷயம் சென்றுள்ளது.. வீசிய உடல் பாகங்களில் இப்போதைக்கு 6 பாகங்களை மீட்டுவிட்டனர்.. இன்னும் 4 பாகங்கள் எங்கே என்று தெரியவில்லை.. தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

DNA
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொன்னதாவது: தாஸின் கழுத்தை வெட்டுவதற்கு கத்தி, கூரான ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.. அதில் கத்தியை கண்டறிந்துள்ளோம்.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆராயும்போது, தீபக் கையில் ஒரு பையை எடுத்துச் செல்வது பதிவாகி இருக்கிறது... கடந்த ஜூன் 5ம் தேதி இவரது உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில், கொலை குறித்து விசாரணை நடந்து வந்தது. டிஎன்ஏ சோதனையும் நடத்தப்பட்டுள்ளது... தற்போது தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர்.

ஜூவல்ஸ்
முதல் கணவர் கல்லு, கேன்சர் நோயால் இறந்துவிட்டாராம்.. அப்போதுதான் பூனத்துக்கு அஞ்ன் தாஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. முதல் மனைவி பண வசதி இல்லாமல், 8 குழந்தைகளையும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்துள்ளார்.. இதனால், அவர்களுக்கு அடிக்கடி செலவுக்கு பணம் அனுப்பி வைப்பாராம் தாஸ்.. சில சமயம், பூனத்தின் நகைகளையும் விற்று, அதை முதல் மனைவிக்கு பணம் அனுப்பியிருக்கிறார் போலும்.. இந்த விஷயம் பூனத்திற்கும், தீபக்கிற்கும் தெரிய வந்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. தாஸை கொல்ல இதுதான் முக்கிய காரணம் என்கிறார்கள்..

கிணறு பூதம்
போலீசார் அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தபோது, ஒரு பெண்ணும், அவருடன் ஒரு இளைஞரும், உடல் பாகம் கிடந்த இடத்திற்கு நைட் நேரத்திற்கு அடிக்கடி வந்து போயுள்ளார்கள்.. அவர்கள் யார் என்பதை கண்டறிந்தபோதுதான், தாயும் - மகனும் அகப்பட்டுக் கொண்டனர்.. அந்த சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.. ஒருபக்கம் ஷ்ரத்தாவின் உடல்பாகங்களை தேடிக் கொண்டே, இன்னொரு பக்கம் தாஸின் உடல்பாகங்களையும் தேடி வருகிறார்கள்.. கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையில், தலைநகரமே திகிலில் திணறிபோய் கிடக்கிறது.

22 + 10 பீஸ்கள்
ஆனால், கணவரின் உடலை 10 பாகங்களாக வெட்டப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், 22 பாகங்களாக வெட்டியதாக புது தகவல் வெளியாகி உள்ளது.. உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று இவர்கள் வீசியிருக்கிறார்கள்.. தீபக் இரவில் கையில் பையுடன் செல்ல, அவருக்கு பின்னாடியே அவரது அம்மாவும் செல்வது அங்கிருந்த கேமராக்களில் தெளிவாக தெரிகிறது.. கடந்த ஜூன் மாதமே, தாஸின் உடல் உறுப்புகளை போலீசார் கண்டுபிடித்தார்களாம்.. ஆனால், அந்த உடல்பாகங்கள் முற்றிலும் சிதைந்து போய் இருந்ததால், அடையாளம் காண முடியவில்லை.. இப்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, இந்த உடல்பாகங்களும் சந்தேகத்தின்பேரில் ஆய்வு செய்யப்பட்டபோதுதான், இந்த கொலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications