• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உடனே வர்றீங்களா".. அதிகாலை போலீசுக்கு போன் செய்த நபர்.. வீட்டுக்குள் போய் பார்த்தால்.. அடக்கடவுளே

Google Oneindia Tamil News

டெல்லி: விடிகாலை நேரத்தில், போலீசுக்கே போனை போட்டு அதிர செய்த நபர் தற்போது கைதாகி உள்ளார்.. டெல்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது..

இதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதை மறுக்க முடியாது... இதற்கு அடுத்தபடியாக உள்ளது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில பெண்கள் சிக்கி கொண்டுள்ளனர்..

பெண்கள் மீது பாஜகவினருக்கு எந்த மரியாதையும் இல்லை.. “எல்லாம் அரசியல் தான்”.. டிஆர்பி ராஜா தாக்கு! பெண்கள் மீது பாஜகவினருக்கு எந்த மரியாதையும் இல்லை.. “எல்லாம் அரசியல் தான்”.. டிஆர்பி ராஜா தாக்கு!

நொறுங்கிடுச்சே

நொறுங்கிடுச்சே

இதில் ஆணவக் கொலைகள் ஒருபக்கம் பெருகி வரும் நிலையில், சைக்கோ கொலையாளிகளும் நாட்டையே பதற வைத்து கொண்டிருக்கிறார்கள்... கட்டிய மனைவியையும், நம்பி இருக்கும் காதலியையும் மனசாட்சியே இல்லாமல் கொலை செய்வதுடன், அந்த கொலைக்கு பிறகு இந்த சைக்கோ கொலையாளிகளின் நடவடிக்கைகள்தான் இதயத்தையே நொறுங்க செய்துவிடுகிறது.. இதோ இப்போதும் டெல்லியில் ஒரு கொலை நடந்துள்ளது.. கொலையும் செய்துவிட்டு, போலீசுக்கு போனை போட்டும் தகவல் கொலையாளியே தகவல் சொல்லி உள்ளார்.

 விடிகாலை

விடிகாலை

டெல்லியின் ஹரிஷ் விஹாரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சில நாட்களுக்கு முன்பு, விடிகாலையில் ஒரு போன் வந்தது.. அதனால், அங்கிருந்த போலீசார் அந்த அழைப்பை எடுத்து பேசினர்.. அதில் பேசிய ஒருநபர், என் மனைவியை கொன்னுட்டேன், இதான் அட்ரஸ், கிளம்பி வாங்க" என்று சொல்லி போலீசாருக்கே ஷாக் தந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் சொன்ன, சுஷீலா கார்டனுக்கு போலீசார் சென்றுள்ளனர்... போலீசுக்கு போன் செய்த நபர், அங்கே தயாராக காத்திருந்தார்..

அர்ச்சனா

அர்ச்சனா

அவர் பெயர் யோகேஷ் குமார்.. 35 வயதாகிறது.. அந்த வீட்டிற்குள் போலீசார் நுழைந்ததுமே, அவரது மனைவி அர்ச்சனா, தரையில் விழுந்து கிடந்துள்ளார்.. ஒருவேளை மயக்க நிலையிலும் அவர் இருக்கலாம் என்பதால், மருத்துவமனைக்கு உடனடியாக போலீசார் கொண்டு சென்றனர். ஆனால், அர்ச்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. இதையடுத்து, யோகேஷ் குமாரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.. அவரது குடும்பம் நிதி நெருக்கடிக்கு ஆளாகிவிட்டதாம்..

 உச்சக்கட்ட டென்ஷன்

உச்சக்கட்ட டென்ஷன்

அதனால், அர்ச்சனா நிறைய இடங்களில் இருந்து கடன் வாங்கியிருக்கிறார்.. இந்த கடன் பிரச்சனையால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்திருக்கிறது.. சம்பவத்தன்றும் இப்படியேதான் சண்டை வெடித்துள்ளது.. தன்னை கேட்காமல் கடன் எதற்காக வாங்குகிறாய்? என்று கேட்டு, உச்சக்கட்ட கோபத்தில் இருந்த யோகேஷ் அர்ச்சனாவை தாக்கியிருக்கிறார்.. இதில் சம்பவ இடத்திலேயே அர்ச்சனா உயிரிழந்துள்ளார்.. கடன் வாங்குவதும் பிடிக்காமல், கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லவும் மனமில்லாமல், கடைசியில் போலீஸையே போனில் கூப்பிட்டு கைதாகி உள்ளார் யோகேஷ் குமார்.

English summary
Crime: why did delhi police arrest young man what happened to his wife
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X