வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை
டெல்லி: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நம் நாடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டிடம் வங்கதேசம் மட்டுமின்றி இலங்கை, மாலத்தீவும் உதவி கோரி கெஞ்சி வருகிறது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதனால் இந்தியா, சீனா உள்பட நம்முடைய அண்டை நாடுகளுக்கு கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி வைத்துள்ளது. இதனால் நம் நாடு மட்டுமின்றி பல நாடுகளில் கேஸ், கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை போர் நிற்பது போல் தெரியவில்லை. இன்று 14வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. தற்போது அனைத்து நாடுகளிடமும் ஓரளவு கச்சா எண்ணெய், கேஸ் இருப்பு உள்ளது. இதனால் தட்டுப்பாடு அவ்வளவு பெரியதாக தெரியவில்லை. ஆனால் போர் நீடிக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் கேஸ், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்படும்.
உதவி கேட்கும் 3 நாடுகள்
இந்நிலையில் தான் தற்போது நம் நாட்டிடம் வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவி கோரி கெஞ்சி வருகின்றன. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ''இலங்கையும், வங்கதேசமும் உதவிக்காக நம் நாட்டை நாடியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் மோதல் தான் இதற்கு காரணம். கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதால் உதவி கோரியுள்ளன. வங்கதேசத்துக்கு ஏற்கனவே டீசல் வழங்கப்பட்டுள்ளது. கூடுலாக அவர்கள் எரிபொருள் கேட்கின்றனர்'' என்றார்.
வங்கதேசத்துக்கு டீசல்
நம் நாட்டை எடுத்து கொண்டால் அண்டை நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஈரான் போர் காரணமாக ஏற்கனவே வங்கதேசம் நம் நம்நாட்டிடம் கோரிக்கை வைத்தது. அதனடிப்படையில் நம் நாட்டிடம் இருந்து வங்கதேசத்துக்கு 5 ஆயிரம் டன் டீசல் வழங்கப்பட்டுள்ளது. இருநாடுகள் இடையே ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா - வங்கதேசம் இடையே நட்பை காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பைப்லைன் வழியாக இந்த டீசல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வங்கதேசம் கூடுதலாக டீசல் கேட்டுள்ளது.
உதவி கோரிய இலங்கை
இதுதவிர இன்னொரு அண்டை நாடான இலங்கையும் நம் நாட்டிடம் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. இருப்பினும் போர் தொடரும் பட்சத்தில் அத்தகைய பிரச்சனையை இலங்கை எதிர்கொள்ளலாம். இதனால் முன்கூட்டியே இந்தியா மற்றும் சீனாவிடம் இலங்கை பேசி வருகிறது.
இந்தியாவிடம் கேட்கும் மாலத்தீவு
அதேபோல் தான் அண்டை நாடான மாலத்தீவு நம் நாட்டிடம் உதவி கோரியுள்ளது. மாலத்தீவிலும் தற்போது கச்சா எண்ணெய் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கி உள்ளது. இதனால் மாற்று நடவடிக்கையை மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா கலீல் மேற்கொண்டு வருகிறார். நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் நம் நாட்டிடம் மாலத்தீவு உதவி கோரியுள்ளார்.
இந்தியாவிடம் கெஞ்சுவது ஏன்?
ஈரான் போர் தொடரும் பட்சத்தில் இந்த 3 நாடுகளும் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடலாம். உள்நாட்டு வன்முறையால் இலங்கை, அமெரிக்கா பாதிக்கப்பட்டதால் பொருளாதாரம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அதேபோல் மாலத்தீவின் பொருளாதாரமும் நல்ல நிலையில் இல்லை. இந்த நாடுகளின் அந்நிய செலவாணி கையிருப்பும் மேம்பட்ட நிலையில் இல்லை.
இப்படியான சூழலில் தான் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் 3 நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் வாங்க அந்நிய செலாவணி மிகவும் முக்கியம் என்பதால் இது அந்த 3 நாடுகளுக்கும் பெரிய பிரச்சனையாக மாறும். அதேவேளையில் நம் நாடு என்றால் நட்பு அடிப்படையில் வாங்கி கொண்டு பிறகு திரும்ப வழங்கலாம் என்பதால் இந்த நாடுகள் இந்தியாவின் கதவை தட்டி உள்ளன.
நட்பு + பகை நாடுகள்
இந்த 3 நாடுகளும் நம்முடைய அண்டை நாடுகளாக இருக்கின்றன. ஒருகாலத்தில் நல்ல நட்பு நாடுகளாக இருந்தன. ஆனால் தற்போது அப்படியான சூழல் இல்லை. நட்பு + பகை என இப்போது அந்த நாடுகள் மாறி மாறி செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்தபோது நம் நாட்டிடம் வம்பிழுத்தது. பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை சீண்டியது. இப்போது ஆட்சி மாற்றம் நடந்த பிறகு அமைதியாக உள்ளது.
அதேபோல் மாலத்தீவு அதிபர் முகமது முஸ்சு,
மேலும் இலங்கையும், தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதை தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி நம் நாடு நெருக்கமாக செயல்பட்டு வந்தாலும் கூட இலங்கை அவ்வப்போது சீனா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சீனாவின் கப்பல்களை அனுமதிப்பது, பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு பயிற்சிக்கு திட்டமிடுவது உள்ளிட்டவை நம் நாட்டுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த 3 நாடுகளும் நட்பு + பகை உணர்வுடன் நம் நாட்டுடன் தொடர்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications