டெல்லியில் கூட்டிய பஞ்சாயத்து.. அவமானப்படுத்துறாங்க.. அடுக்கிய தமிழிசை.. மறுநாளே போன ஆளுநர் ரவி!
டெல்லி: தெலுங்கானா ஆளுநர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்ற நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தற்போது டெல்லியில் இருக்கிறார். இரண்டு ஆளுநர்களும் டெல்லிக்கு இரண்டு முக்கியமான காரணங்களுக்காக சென்று இருக்கிறார்கள்.
அடுத்துதடுத்து ஆளுநர்கள் டெல்லிக்கு சென்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. இரண்டு பேரும் டெல்லி சென்றது ஏன்? இதற்கு பின் உள்ள காரணம் என்ன என்று பார்க்கலாம்.
தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தமிழக தலைவராக இருந்துவிட்டு.. அதன்பின் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து கவனித்து வருகிறார்.

என்ன மோதல்
தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையிலான மோதல்தான் இந்த டெல்லி பயணத்திற்கு காரணம். இந்த மோதல் தொடங்கி எம்எல்சி பதவி ஏற்பில் இருந்துதான். தெலுங்கானா மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது. இதை தமிழிசை ஏற்றுக்கொள்ளாததும் இந்த மோதலுக்கு காரணம். கவுசிக் ரெட்டி கட்சி சார்புடையவர் என்பதால் அவரை ஏற்கவில்லை என்று தமிழிசை காரணம் சொன்னார்.

மரியாதை இல்லை
இதையடுத்து தமிழிசையை அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் கேசிஆர் புறக்கணித்தார். அங்கு ஆளுநர் உரை இல்லாமலே பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் நடந்த பல்வேறு கூட்டங்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார்.முழுகு மாவட்டத்தில் நடந்த சமக்கா சரலக்கா விழாவில் தமிழிசை கலந்து கொள்ள சென்றார். அப்போது அவரை அழைக்க அரசு,அதிகாரிகள், போலீஸ் தரப்பில் இருந்து யாரும் செல்லவில்லை. அதோடு தமிழிசை தெலுங்கானாவில் செல்ல போக்குவரத்து வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

போக்குவரத்து
ஏதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் தமிழிசை காரில் செல்கிறார் அல்லது ரயிலில் செல்கிறார். அவருக்கு அரசு சார்பில் விமானம் ஏற்பாடு செய்து தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லை தமிழிசை கலந்து கொள்ளும் எந்த நிகழ்விற்கும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் செல்வது இல்லை. அதேபோல் ஆளுநர் தமிழிசை அழைக்கும் நிகழ்ச்சிக்கும் யாரும் செல்வது இல்லை. இதுதான் அங்கு நடக்கும் மோதலின் சுருக்கம்.

டெல்லி
இதையடுத்து செல்லுக்கு போய் நேராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பஞ்சாயத்து கூட்டி இருக்கிறார் தமிழிசை. பிரதமரிடம் தனது புகார்களை கூறிய தமிழிசை.. அமித் ஷாவிடம் தெலுங்கானாவின் சட்ட ஒழுங்கு பற்றி பேசி இருக்கிறார். தெலுங்கானாவில் போதை பொருள் விற்பனை கரைபுரண்டு ஓடுவதாக அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில்.. இது பற்றி ரிப்போர்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதோடு ஆளுநர் பதவியை தெலுங்கானா டிஆர்எஸ் கட்சியினர் அவமானப்படுத்துறாங்க என்றும் செய்தியாளர்களிடம் தமிழிசை புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாடு
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை டெல்லி போன மறுநாளே தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியும் டெல்லி சென்று இருக்கிறார். இவர் சென்ற காரணம் தமிழிசை அளவிற்கு சீரியசானது இல்லை என்றாலும்.. தமிழ்நாடு அரசின் எதிர்ப்புகள் பற்றி இவர் பேசுவார் என்று எதிர்பார்ப்படுகிறது. பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்திப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. நீட் தேர்வு விவகாரம் பற்றி ஆளுநர் ரவி மோடியிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

நீட் விவகாரம்
நீட் தேர்வு விவகாரத்தால் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்று திமுக சார்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதேபோல் ஆளுநரை கட்டுப்படுத்தும் மசோதா ஒன்றும் திமுக எம்பி வில்சன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் நீட் தேர்வு விவகாரம் உச்சம் பெற்றுள்ளதால் ஆளுநர் ரவி டெல்லி சென்று இருக்கிறார். ஆளும் தரப்பிற்கும் ஆளுநர் தரப்பிற்கும் இதனால் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்தான் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உறுதியா?
தமிழிசை போலவே உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை ரவி சந்திக்க இருக்கிறார். அதேபோல் குடியரசுத் தலைவரை ரவி சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்புகள் இன்னும் உறுதியாகவில்லை. ஏனென்றால்.. இது அரசு முறை பயணம் அல்ல.. அவர் தனிப்பட்ட பர்சனல் விஷயங்களுக்காகவும் டெல்லி சென்றுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications